பொது தேர்தலை மிஞ்சிய நடிகர் சங்க தேர்தல்.! ஒரு ஓட்டுக்கு இவ்வளவு ரூபாயா.!

0
685
Nadigar-sangam
- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற் தேர்தலுக்கு பல கட்சிகளும் பணத்தை வாரி இறைத்தது. பொதுவாக அரசியல் சார்ந்த தேர்தலுக்கு தான் கட்சிகள் அனைத்தும் பணத்தை வாரி இறைப்பார்கள். ஆனால், விரைவில் தென்னிந்திய சினிமாவில் நடைபெற உள்ள நடிகர் சங்க தேர்தலுக்கு பணத்தை வாரி இறைத்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Image result for நடிகர் சங்க தேர்தல்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 7-ந் தேதி தொடங்குகியது. மனுதாக்கல் செய்ய 10-ந் தேதி கடைசி நாள். மனுக்களை 14-ந் தேதி வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலை வெளியாகிறது.

இதையும் படியுங்க : சாமி சிலைக்கு முன்பாக தொடையை தூக்கி காண்பித்து போஸ்.! யாஷிகாவை வறுத்தெடுத்த ரசிகர்கள்.! 

- Advertisement -

இந்த தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மீண்டும் நிற்கிறார். நடிகர் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகின்றனர்.

Image result for nasar bhagyaraj

மேலும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகைகள் குஷ்பு, லதா, கோவை சரளா, ஸ்ரீமன், பசுபதி, ரமணா, நந்தா, தளபதி தினேஷ், சோனியா, குட்டி பத்மினி, பிரேம், ராஜேஷ், மனோபாலா, ஆதி, ஜெரால்டு, காளிமுத்து, ரத்னப்பா, எம்.ஏ.பிரகாஷ், அஜய்ரத்னம், பிரசன்னா, ஜூனியர் பாலையா போன்ற பல பிரபலங்கள் போட்டியிடுகின்றனர்.

-விளம்பரம்-

கடந்தமுறை பொதுத் தேர்தலைபோல கவனம் பெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் இம்முறையும் பொதுத் தேர்தலைபோல பணப்பட்டுவாடா நடக்கும் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரத்திற்கு மேல் பணம் தரப்படும் என்று சொல்லப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement