அந்த பாடலை நான் மூச்சுவிடாமல் பாடலை. ஆனால், இந்த பாடலை பாடினேன் – எஸ் பி பியின் அரிய வீடியோ.

0
1493
spb
- Advertisement -

எஸ் பி பி சொன்னதும் அவர் பாடகர் என்பதை தாண்டி நம் நினைவில் முதலில் வருவது கேளடி கண்மணி படத்தில் இடம்பெற்ற ‘மண்ணில் இந்த காதல்’ பாடலில் வரும் சரணத்தில் எஸ் பி மூச்சு விடாமல் பாடியது தான். இப்படி ஒரு நிலையில் இந்த பாடலை மூச்சு விடாமல் படவில்லை என்று எஸ் பியே கூறிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரபல பின்னணி பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் காலமான சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

-விளம்பரம்-
SPB-ன் கேளடி கண்மணி திரைப்படத்தின் அனுபவங்களை பற்றி மெய்சிலிர்த்து பேசிய இயக்குனர் வசந்த்

SPB-ன் கேளடி கண்மணி திரைப்படத்தின் அனுபவங்களை பற்றி மெய்சிலிர்த்து பேசிய இயக்குனர் வசந்த் – SPB

Jaya TV ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಭಾನುವಾರ, ಸೆಪ್ಟೆಂಬರ್ 27, 2020

கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 51 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த  எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த வெள்ளிக்கிழமை , செப்டம்பர் 25 பிற்பகல் மரணம் அடைந்தார். எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது. எஸ் பி பியின் மறைவிற்கு நாட்டின் பிரதமர் துவங்கி பாலிவுட், டோலிவுட் வரை இருக்கும் பல்வேறு பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

- Advertisement -

மேலும், பல்வேறு தமிழ் நடிகர், நடிகைகளும் எஸ் பி பியின் உடலுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர்.இதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 26 எஸ் பி பியின் உடல் 72 குண்டுகள் முழங்க அவரது சொன்ன கிராமத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.எஸ் பி பியின் மறைவை தொடர்ந்து அவரது பல்வேறு நினைவுகளை பற்றி இணையத்தில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இறப்பதற்கு முன்பாக எஸ் பி பி பங்குபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ ஒன்றில் கேளடி கண்மணி பாடலை தான் மூச்சு விடாமல் பாடவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், அமர்க்களம் படத்தில் இடம்பெற்ற சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலை மூச்சு விடாமல் பாடியதாக கூறியுள்ளார் எஸ் பி பி.

-விளம்பரம்-
Advertisement