தேசிய விருதை விட இது தான் எனக்கு மிகப்பெரிய விருது – ஸ்ரீகாந்த் தேவா பதிவிட்ட வீடியோ.

0
627
Sreekanth
- Advertisement -

தான் வாங்கிய தேசிய விருதினை தனது தாயிடம் காட்டி ஆசி பெற்ற வீடியோவை பகிர்ந்து இருக்கிறார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா. தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் 69 ஆவது வருட தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் சமீபத்தில் நடந்தது. இதில் சிறந்த நடிகர், நடிகை, சிறந்த திரைப்படம் என பல பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. அதில் சிறந்த நடிகருக்கான விருதை புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுன் வாங்கி இருக்கிறார். சிறந்த நடிகைக்கான விருதை அலியா பட்டும், நடிகை கீர்த்தி சனோன் ஆகியோருக்கும் வழங்கி இருந்தார்கள்.

-விளம்பரம்-

சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை விவசாயி படம் வென்று இருந்தது. மேலும், சிறந்த இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத்திற்கு வழங்கி இருந்தனர். அதே போல கதை அல்லாத படங்கள் (Non – Feature Films)  பிரிவின் கீழ் இசையமைப்பாளர் விருது ஸ்ரீகாந்த் தேவாவிற்கு அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் நடிகர்களை போலவே இசையமைப்பாளர்களின் பல வாரிசுகள் இசையமைப்பாளர்களாக ஜொலித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தேனிசை தென்றல் தேவாவின் மகனும் தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். கடந்த 2000ஆம் ஆண்டு பாண்டியராஜன் இயக்கத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்த டபுள்ஸ் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஸ்ரீகாந்த் தேவா அதன் பின்னர் கூத்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி சிவகாசி போன்ற பல்வேறு சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் இவருக்கு கருவறை என்ற குறும்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது. திரைப்படம் சாராத பிரிவில், சிறப்பு விருதாக (ஸ்பெஷல் மென்ஸன்), ‘கருவறை’ என்ற ஆவணப்படத்திற்காக ஸ்ரீ காந்த் தேவாவிற்கு இந்த விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் இந்த விருதினை வாங்கி இருந்தார் ஸ்ரீகாந்த் தேவா.

-விளம்பரம்-

ஸ்ரீகாந்த் தேவா விருது வாங்கிய இந்த வீடியோவை டிவியில் தனது குடும்பத்துடன் பார்த்த தேவா, ஒரு குழந்தையை போல துள்ளி குதித்தார். இந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா. முன்னதாக தனக்கு கிடைத்த இந்த விருது குறித்து பேசிய ஸ்ரீகாந்த் தேவா ‘இந்திய ஜனாதிபதி கையால் இந்த விருதை வாங்கியது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

விருது என்றாலே கலைஞர்களுக்கு பெருமை தான். அதிலும் தேசிய விருது என்பது மிகவும் சந்தோஷம் தரக்கூடியதாக வாழ்வில் மிக முக்கியமான ஒரு நாளாக இந்த நாள். இந்த விருதை இசையமைப்பாளரான எனது தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன் என் தந்தை ஏராளமான விருதுகளை வாங்கி இருக்கிறார். என் தந்தைக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று கடினமாக முயற்சித்தோம். ஆனால், அது நடக்கவில்லை. இன்று அது எனக்கு கிடைத்திருக்கிறது.

இந்த விருதை எனது தந்தைக்கு  அர்ப்பணிக்கிறேன் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தான் வாங்கிய தேசிய விருதை தனது அம்மாவிடம் காட்டி ஆசி வாங்கி இருக்கிறார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. மேலும், அந்த பதிவில் தேசிய விருதை வாங்கியதை விட அதை என் அம்மாவிடம் காபித்து ஆசீர்வாதம் வாங்கியது பெருமையாக இருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார்.

Advertisement