இளசுகள் மனதை கொள்ளை கொண்ட ஸ்ரீலீலாவின் சிறு வயது டான்ஸ் வீடியோ. அப்பயே இப்படியா.

0
284
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை ஹீரோக்களை விட சிறப்பாக நடனமாடும் ஹீரோயின்கள் மிகவும் குறைவு தென்னிந்திய சினிமாவை பொருத்த வரை தமன்னா, சாய் பல்லவி போன்ற பல நடிகைகள் தங்கள் சிறந்த நடனத்திற்காகவும் அறியப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்து. அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் சிறந்த டான்சர் என்ற பெயரை சமீபத்தில் எடுத்தவர் இளம் நடிகை ஸ்ரீலீலா.

-விளம்பரம்-

தெலுங்கு சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஸ்ரீ லீலா. இவர் 2019 ஆம் ஆண்டு கிஸ் என்ற கன்னட மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமாகியிருந்தார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.அதனை தொடர்ந்து இவர் தெலுங்கு, கன்னடம் என இரண்டு மொழிகளிலும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடிகை மட்டும் இல்லாமல் சிறந்த டான்ஸரும் ஆவார்.

- Advertisement -

இப்படி சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்திருக்கிறார் ஸ்ரீ லீலா.அதேபோல் சமுத்திரகனியின் இயக்கத்தில் விநோதய சித்தம் படத்தின் தெலுங்கு ரீமேக்கின் புரோ படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ரீ லீலா நடனமாட இருக்கிறார். இந்த படத்தில் பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் ஆகியோர் முக்கிய இடத்தில் நடிக்கின்றனர். மேலும், இந்தப் பாடலுக்கு நடனமாட 60 லட்சம் ரூபாய் சம்பளமாக ஸ்ரீ லீலா கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

பின் பாலகிருஷ்ணாவின் 108 வது படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். பகவந்த் கேசரி என்ற பெயரில் வெளியான இந்த படத்தில் ஸ்ரீலீலா பாலகிருஷ்ணாவின் வளர்ப்பு மகளாக நடித்து இருந்தார் ஸ்ரீலீலா. இப்படி சினிமாவில் நுழைந்த குறுகிய காலகட்டத்திலேயே தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான பாலகிருஷ்ணா படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தற்போது டோலிவுட்டின் சென்சேஷனல் நடிகையாக திகழ்ந்து வருகிறார் ஸ்ரீ லீலா.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘குண்டூர் காரம்’ படத்தில் இவர் ஆடிய ஆட்டம் தென்னிந்திய வட்டாரம் முழுதும் பேமஸ் ஆகி விட்டது. இந்த பாடலை மகேஷ் பாபுவை விட ஸ்ரீலீலாவின் டான்ஸ் தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இது தொடர்பான ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர அது பலரின் பேவரைட் லிஸ்டில் சேர்ந்துள்ளது.

இந்த பாடலில் ஸ்ரீலீலாவின் நடனத்தால் சொக்கிப்போகி இருக்கும் தமிழ் ரசிகர்கள் கூட எப்படியாவது அந்த தங்கத்தை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்துவிடுங்கப்பா என்று ஏங்கி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ஸ்ரீ லீலா தனது சிறு வயதில் பரதநாட்டியம் ஆடும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சிறு வயதிலேயே பரதநாட்டியத்தில் பின்னி எடுக்கும் நடிகை ஸ்ரீ லீலா தற்போது, தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் நடனத்தில் பட்டையை கிளப்பி வருகிறார்.

Advertisement