அதே இந்து முஸ்லீம் ஒற்றுமையை சொல்லும் படங்கள் தான் – ஆனால், அயோத்திக்கு ஒரு உருட்டு லால் சலாமுக்கு ஒரு உருட்டு – கேலிக்கு உள்ளான பிரசாந்த்.

0
590
- Advertisement -

ஒரு காலத்தில் தான் வார இறுதியில் டாப் 10 நிகழ்ச்சியை பார்த்து புதிதாக வெளியாகும் படங்களின் விமர்சனங்களை நாம் பார்த்து வந்தோம். ஆனால், சமீப வருடங்களாக ஒரு திரைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே யூடுயூபில் விமர்சங்களாக வந்து விடுகிறது. அதிலும் தமிழில் விமர்சனசம் செய்யும் யூடுயூப் சேனல்கள் ஏராளம். இதில் ஒரு சிலர் மாபெரும் பிரபலமடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் பிரசாந்தும் ஒருவர்.

-விளம்பரம்-
Lal Salaam

முகநூல்,ட்விட்டர் வலைதளங்களில் வரும் விமர்சனங்களுக்கு மக்கள் மத்தியில் சிறிதளவு செல்வாக்கு இருக்கும் நிலையில் அதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் வேலையை ஒரு சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர். அப்படி யூடுயூப் விமர்சனம் செய்யும் நபர்களில் பிரசாந்த் மிகவும் முக்கியமாணவர்.

- Advertisement -

மற்ற விமர்சகர்களை விட இவரது விமர்சனங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவிடுகிறது. இவரை பாண்டா பிரசாந்த் என்று மக்கள் மத்தியில் செல்லப்பெயரை வாங்கிய இவர் சினிமாவில் கூட தனது தடத்தை பதித்து விட்டார். ஆனால், தன்னை கேலி செய்பவர்களுக்கு கூட அழகான அட்வைஸ்சை செய்து ஆப் செய்துவிடுவார். மேலும்,

சமீபத்தில் கூட சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். இதில் இவரது வித்யாசமான தோற்றத்தை கண்டு பலர் ரசித்தாலும் அதே அளவு கேலியும் செய்தனர். இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் வெளியான லால் சலாம் படத்தை விமர்சனம் செய்து இருக்கிறார். அதில் இவர் பேசிய கருத்துக்கள் தான் நெட்டிசன்களால் கேலிக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ஸ்டார் ரஜினி காந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். விளையாட்டை மையமாக எடுக்கபட்ட இந்த படத்தில் இந்து – முஸ்லீம் ஒற்றுமையை முக்கியம் குறித்து சொல்லப்பட்டு இருந்தது.

இதே போல கருத்தை தான் சசி குமார் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ படமும் சொல்லி இருந்தது. ஆனால், அயோத்தி படத்தின் விமர்சனத்தில் அந்த விஷயங்களை ஒரு பாசிட்டிவாக சொன்ன பிரசாந்த், லால் சலாம் படத்தில் சொல்லப்பட்ட அதே விஷயத்தை தேவையில்லாத விஷயம் என்பது போல சொல்லி இருக்கிறார்.

Advertisement