தற்போது இருக்கும் காலகட்டத்தில் சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளும் ரசிகர் மத்தியில் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே வைத்து வருகின்றனர். அதனால் சின்னத்திரை நடிகைகள் எது செய்தாலும் அது பேசு பொருளாக மாறிவிடுகிறது. இதனால் ஒரு சில சமயங்களில் சின்னத்திரை பிரபலங்கள் சர்ச்சையிலும் சிக்கிவிடுகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அஜித்தின் வலிமை படம் குறித்து பேசி அஜித் ரசிகர்களால் தொல்லைகளை சந்தித்து வருபவர் சின்னத்திரை சீரியல் நடிகை ஸ்ரீநிதி.
வலிமை படத்திற்கு விமர்சனம் சொல்லி அஜித் ரசிகர்களால் படாத பாடு பட்ட ஸ்ரீநிதி சமீபத்தில் சிம்பு குறித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீநிதி தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘ஒருநாள் அனைவருக்கும் திருமணம் ஆகியிருக்கும், நானும் சிம்புவும் மட்டும் தான் மீதம் இருப்போம்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஒரு ரசிகர் ’நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமே? என கேள்வி எழுப்பிய போது அதற்கு ’செய்துகொள்ளலாம் தான், நல்ல ஐடியா தான், ஆனால் எனக்கு என்று ஒரு ஆள் இருக்கிறதே’ என்று பதில் அளித்து இருந்தார்.
இதையும் பாருங்க : தன்னுடைய தம்பிக்கு ஜோடி தேடி விஷ்ணு விஷால் வெளியிட்ட விளம்பரம் – வைரலாகும் புகைப்படம்
சிம்பு வீட்டின் முன் தர்ணா :
திடீரெனெ சிம்பு வீட்டின் முன்பு அமர்ந்து சிம்புவை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.இதனை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்,மேலும் அந்த பதிவில் ,என்னால நம்ப முடியல எனக்காக சிங்கிள் ஆ இருந்துருக்காரு,பாத்துட்டு இருக்குறவங்க எங்களை சேர்த்து வைங்க,லேட்டா தான் புரிஞ்சது,இன்னோருத்தர நான் கல்யாணம் பண்ண மாட்டேன்.
ஜல்லிக்கட்டுக்கு மட்டும் போராட்டம்,லவ்வுக்கு போராட்டம் இல்லையா என கூறி அவர் வீட்டு முன்னாள் அமர்ந்து போராட்டம் செய்துவருவதாக கூறியுள்ளார். ஸ்ரீநிதியின் இந்த பதிவை கண்டு சிம்புவின் ரசிகர்கள் பலரும் இவருக்கு எதோ பிரச்சனை இருக்கிறது. இவரை மெண்டல் ஆஸ்பிடலில் சேர்த்துவிடுங்கள் என்று திட்டி தீர்த்து வந்தனர். மேலும், ஒரு சிலரோ இவர் இதையெல்லாம் விளம்பரத்திற்காக தான் செய்கிறார். இவர் அடுத்த மீரா மிதுன் என்றும் கூறி வந்தனர்.
சிம்பு தான் என்னை டார்ச்சர் பன்றார் :
அதே போல ஸ்ரீநிதியின் இந்த பதிவை கண்டு பல யூடுயூப் சேனல்கள், ஸ்ரீநிதி, சிம்புவை காதலிக்கிறார் என்று செய்தியை வெளியிட்டுள்ளனர். அதை கண்டு அவரின் தந்தை ஸ்ரீநிதிக்கு மெசேஜ் செய்துள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீநிதி ‘நான் சிம்புவை காதலிக்கவில்லை அப்பா. சிம்பு தான் என்ன லவ் பன்றாரு, அவர்கிட்டேயே கேளுங்க என்ன டார்ச்சர் பண்றாரு, நான் பொய் சொல்ல மாட்டேன் தானே’ என்று பதில் அனுப்பி இருக்கும் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து இருக்கிறார்.
சிம்புவிடம் போய் கேளுங்க :
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரீநிதி, நான் பொய் சொல்லவில்லை, நான் பைத்தியமும் இல்லை. என் நண்பர்களே என்னை ஏமாற்றிவிட்டார்கள். என் அம்மா கூட என்னுடன் பேசுவது இல்லை. நான் உண்மைகள் சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ள மாற்றங்க. அவரை நம்பி தானே அவர் வீட்டு வாசலுக்கு போனேன். நான் பேசுறது பொய்னு முடிஞ்சா சிம்புவை சொல்ல சொல்லுங்க பாப்போம் என்று பேசி இருக்கிறார்.