உன் மீது இருக்கும் அன்பு மற்றும் மரியாதையில் சொல்கிறேன் – நக்ஸத்ரா திருமண புகைப்படத்தை போட்டு ஸ்ரீநிதி என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
852
sreenidhi
- Advertisement -

சமீபத்தில் திடீர் திருமணம் செய்த நக்ஸத்ராவிற்கு வாழ்த்து தெரிவித்து ஸ்ரீநிதி பதிவிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடர் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சீரியல் நடிகை நட்சத்திர கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த தொடர் நிறைவடைந்த நிலையில் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் தொடரில் நடித்து வருகிறார் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த சீரியலில் கதைப்படி நட்சத்திராவுக்கு திருமண எபிசோடு ஷூட் செய்யப்பட்டது.

-விளம்பரம்-

தற்போது உண்மையிலேயே இவருக்கு திருமணம் முடிந்து இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நக்ஸத்ரா குறித்து பேசிய அவரின் நெருங்கிய தோழியும், சீரியல் நடிகையுமான ஸ்ரீநிதி நக்ஸத்ரா குறித்து பேசிய போது ‘நட்சத்திரா ரொம்ப கஷ்டப்பட்டு சினிமா துறைக்கு வந்து இருக்கா, அவ நிறைய தப்பான விஷயங்கள் செய்து இருக்கா, ஆனா அவ தப்பான பொண்ணு கிடையாது. நட்சத்திரா ஒரு பையனை காதலிக்கிறார், ஒரு மாதத்திலேயே நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்டது. ஆனால் எங்களுக்கு அது தெரியாது.

- Advertisement -

இதையும் பாருங்க : பிகில் படத்தை பார்த்த ரசிகருக்கு 7 ஆயிரம் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு.

நக்ஸத்ரா குறித்து ஸ்ரீநிதி ஏற்படுத்திய சர்ச்சை :

நட்சத்திராவின் வாழ்க்கைய காப்பாத்த முடியல, என் நம்பரை பிளாக் பண்ண வச்சிட்டாங்க..நட்சத்திராவின் சம்பளம் 2.5 லட்சம் ஆனா அவ கணக்கில் 10 ஆயிரம் கூட இல்லை, இதெல்லாம் கேட்டதற்கு என்னை அடிக்கிறாங்க, திட்றாங்க, சித்து நிலைமை நட்சத்திராவுக்கு நடந்துடும்ன்னு பயமா இருக்கு என்றும் அவர் கூறி இருந்தார். இதுகுறித்து விளக்கமளித்த நக்ஸத்ரா ‘நான் லவ் பண்ண பையன் பேமிலி என்ன பிடிச்சி வச்சி இருக்காங்கன்னு சொல்றது எல்லாம் பொய்.

-விளம்பரம்-

ஸ்ரீநிதி குறித்து நக்ஸத்ரா :

அவ எதோ மன அழுத்தத்தில் இருக்கிறார். அவள் சொல்வதை எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம். அவள் என்மீது உள்ள அக்கரையில் அப்படி செய்துகொண்டு இருக்கிறாள். நான் சந்தோசமாக தான் இருக்கிறேன்’ என்று கூறி இருந்தார். அதே போல தனது திருமணம் குறித்த அறிவிப்பை ஜூலை மாதம் அறிவிப்பேன் என்றும் கூறி இருந்தார் நக்ஸத்ரா. இப்படி ஒரு நிலையில் நக்ஸத்ராவிற்கும் விஸ்வா என்பவருக்கும் திடீர் திருமணம் நடைபெற்று இருக்கிறது.

தாத்தாவின் ஆசையால் நடந்த திருமணம் :

நட்சத்திராவைத் தூக்கி வளர்த்த தாத்தா உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். பள்ளிப் படிப்பு வரை நட்சத்திரா அந்தத் தாத்தாவின் வீட்டிலிருந்தே வளர்ந்தவர். அந்தத் தாத்தாவின் ஒரே ஆசை நட்சத்திராவை மாலையும் கழுத்துமாகப் பார்த்து விட வேண்டும் என்பதுதான். அதனால தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக குடும்பக் கோயிலில் வைத்து வீட்டுப் பெரியவர்கள் முன்னிலையில் நட்சத்திரா – விஷ்வா திருமணம் நடந்து முடிந்தாக கூறப்படுகிறது.

நக்ஸத்ரா குறித்து ஸ்ரீநிதி போட்ட பதிவு :

நக்ஸத்ராவின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இப்படி ஒரு நிலையில் நக்ஸத்ராவின்திருமணத்திற்கு வாழ்த்து சொல்லும் வகையில் ஸ்ரீநிதி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் நக்ஸத்ராவின் திருமண புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘உன்மீது இருக்கும் அன்பு மற்றும் அக்கறையுடன் ‘வாழ்க வளமுடன்’ என்றும் அன்புடன் உங்கள் SSR’ என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே கேலி செய்த ஸ்ரீநிதி :

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நக்ஷத்ராவின் தோழியும் சீரியல் நடிகையுமான நிவாஷினி திவ்யா, நக்ஷத்திரா மற்றும் அவரது வருங்கால கணபவருடன் எடுத்துக்கொண்டபுகைப்படம் ஒன்றை தன் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இருந்தார். மேலும், அந்த புகைப்படத்தில் ‘Family’ என்றும் குறிப்பிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து கேலி செய்யும் விதமாக எமோஜி ஒன்றை போட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement