பிகில் படத்தை பார்த்த ரசிகருக்கு 7 ஆயிரம் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு.

0
477
bigil
- Advertisement -

நடிகர் விஜய் படம் பார்த்தவருக்கு 7 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக பட்டைய கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம் பெற்று விடும். கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணி புரிந்து இருக்கிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : நடிகர் சோ அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றி தான் – எந்த படம் தெரியுமா ? அதோட வசூல் இன்றைய நிலையில் இத்தனை கோடி.

விஜய் நடிக்கும் படம்:

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்க இருக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் விஜய் படத்திற்கு சென்ற நபருக்கு தியேட்டர் நிர்வாகம் இழப்பீடு தரவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு போட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

டிக்கெட்டின் விலை கூடுதல்:

பொதுவாக பிரபல நடிகர்களின் படம் என்றாலே திரையரங்களில் டிக்கெட்டின் விலை கூடுதல் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். இருந்தாலும் ரசிகர்கள் முந்திக் கொண்டு டிக்கெட் வாங்கி படத்தை பார்க்கிறார்கள். அந்த வகையில் கடந்த 2020 சென்னை செம்பியம் சத்தியநாராயணன் சாலையை சேர்ந்தவர் தேவராஜன். இவர் அயனாவரம் பாரதி நகரில் உள்ள கோபிகிருஷ்ணா ருக்மணி தியேட்டரில் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தை பார்க்கப் போயிருந்தார். இணையம் வாயிலாக இவர் 223.60 ரூபாய் கட்டணம் முன் பதிவு செய்து இருந்தார்.

நுகர்வோர் மன்றத்தில் அளித்த புகார்:

இதை எதிர்த்து இவர் நுகர்வோர் மன்றத்தில் திரையரங்கின் மீது புகார் அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 113 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது கட்டண விதிகளுக்கு முரணானது. கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து திரையரங்கம் அதிகாரிகளிடம், போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூடுதலாக வசூலிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்துடன் 4.80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் சென்னை மாவட்ட வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்றம் அளித்த உத்தரவு:

வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால், விசாரணையில் தியேட்டர் தரப்பிலிருந்து யாரும் ஆஜராகவில்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தியேட்டர் நிர்வாகம் நியாயமற்ற வர்த்தக நடைமுறை ஈடுபட்டதால் சேவை குறைபாடு உள்ளது. சினிமாவுக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை உடன் 5,000 ரூபாய் இழப்பீடு, 2000 ரூபாய் வழக்குச் செலவை மனுதாரருக்கு தியேட்டர் நிர்வாகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement