சக போட்டியாளரை அறைந்த ஸ்ரீசாந்த்..!வெளியான ஷாக்கிங் வீடியோ..!

0
135
Sreeshanth

தமிழில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி, தெலுகு, மலையாளம் என்று பல மொழிகளில் ஒளிபரப்பாகியது. இதில் அதிகபட்சமாக இந்தியில் தான் 12 சீனை நெருங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் 12 வது சீசன் கடந்த செப்டெம்பர் 16 ஆம் தேதி துவங்கியது.

View this post on Instagram

Tommorow's Promo

A post shared by Bigg Boss 12 ? (@biggboss_khabri) on

இந்த சீனில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் ஐ பி எல் சூதாட்டத்தால் கிரிக்கெட் விளையாட தடை பெற்றார். மேலும், இவர் கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடும் வீரர் என்ற பெயரெடுத்தவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கூட சக போட்டியாளர்களிடம் மிகவும் ஆக்ரோஷமாகவே இருந்து வருகிறார் ஸ்ரீசாந்த. ஸ்ரீசாந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்த ரோஹித் சுசந்தி என்பவரை ஓரின சேர்க்கையாளர் என்று விமரசித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோ ஒன்றில் கேப்டன்சி டாஸ்கின்போது ஸ்ரீசாந்துக்கும் சக போட்டியாளரான ரோஹித் சுசாந்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரோஹித் ஸ்ரீசாந்தை பார்த்து பிச்சைக்காரன் என்று கூற அவருக்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்துவிட்டது. உடனே ரோஹித்தை கன்னத்தில் அறைந்துவிட்டார்