ஸ்ரீ லீக்சில் சிக்கிய சச்சின்..! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி.!

0
326
Sachin

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு துறையில் தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்களின் பெயர்களை ஆதாரத்துடன் நிரூபித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தன்னை படுக்கைக்கு அழைத்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பெயரை ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.

இதுவரை சினிமா துறை பிரபலங்கள் குறித்து மட்டுமே சர்ச்சையான பதிவுககளை போட்டு வந்த ஸ்ரீரெட்டியின் பார்வை தற்போது கிரிக்கெட் உலகின் பக்கம் திரும்பியுள்ளது. சமீபத்தில் நடிகை ஸ்ரீரெட்டி இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று கருதப்படும் சச்சின் குறித்து சர்ச்சையான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நடிகை ஸ்ரீரெட்டியின் பதிவில் , ரொமான்டிக் நபர் என்று அழைக்கப்படும் சச்சின்,ஹைத்ரபாத்திற்கு வந்த போது ஒரு அழகான பெண் அவருடன் ரொமான்ஸ் செய்திருந்தார். அதற்கு உதவியாக உயரிய பதவியில் உள்ள சாமுண்டீஸ்வரி சாமி தான் தரகராக வேலை பார்த்தார். சிறப்பாக விளையாடும் வீரர் ரொமான்ஸிலும் நன்றாக விளையாடுவாரா? என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு மிக பெரிய சர்ச்சையாக தற்போது வெடித்து வருகிறது.

sachin-tendulkar

உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரராக மதிக்கப்படும் சச்சின் ஒரு சிறந்த மனிதராகவும் இருந்து வருகிறார். இதுவரை இந்திய கிரிக்கெட் உலகில் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் இருக்கும் ஒரு வீரர் சச்சின் மட்டும் தான். அப்படிபட்டவரை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியுள்ளதை கண்டு அனைவரும் தற்போது ட்விட்டரில் நடிகை ஸ்ரீரெட்டியை வறுத்தெடுத்து வருகின்றனர்.