70 மற்றும் 80களில் ரஜினி மற்றும் கமல் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தியவர் ஸ்ரீதேவி. சிறு வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்தவர். இந்திய சினிமாவின் அனைத்து மொழி படங்களிலும் நடித்தார்.
தற்போது 54 வயதாகும் அவர் தற்போதும் கூட 30 வயது தோற்றத்தை கொடுக்கும் அளவிற்கு ரம்யமாக இருப்பார். ஆனால், அவரது திருமணத்திற்கு பிறகு அழகை கூட்ட மூக்கிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். ஆனால், அது அவ்வளவு எடுப்பாக இல்லை.
மேலும், தற்போது தனது உதட்டிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரா என கேள்விகள் எழுந்துள்ளது. பாலிவுட் இயக்குனர் அனுராக் பாசு வீட்டில் சரஸ்வதி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதேவியின் உதடுகள் வீங்கி இருந்தது. இதனை பார்த்த பிரபலங்கள் என்ன உங்கள் உதடு வீங்கி உள்ளது என கேட்டனர். மேலும், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டீர்களா? என கேட்டதற்கு,
நான் பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்யவில்லை, தினமும் நல்ல உணவுகளை எடுக்கிறேன். வாரத்திற்கு இரண்டு முறை டென்னிஸ் ஆடுகிறேன், அதுமட்டும் இன்றி உணவு கட்டுப்பாட்டில் இருக்கிறேன்.
இதையும் படிங்க: உதடுகள் பிளாஸ்டிக் சர்ஜரியா ? சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீதேவியின் புகைப்படம் உள்ளே !
எனக்கு பிளாஸ்டிக் சர்ஜரியில் நம்பிக்கை இல்லை, அதனால் நான் ஏன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் எனக் கூறி மழுப்பியுள்ளார் ஸ்ரீதேவி. உண்மை என்பது அவருக்கு மட்டும்தான் வெளிச்சம்.