பாரின் டான்ஸர் JIKAMANU உடன் வெறியாட்டம் போடும் ஸ்ரீதர் மாஸ்டர் மகள். வைரலாகும் வீடியோ.

0
647
JIKAMANU
- Advertisement -

ஸ்ரீதர் மாஸ்டர் 2006 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தரின் இயக்கத்தில் “பொய்” என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். அப்பட்டதில் இவர் ஒரு துணை கதாபாத்திரதிரமாக தோன்றினார். சிறு வயதில் நாம் செம குத்து போட்ட பாடல் என்றால் 2008 ஆம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளிவந்த காதலில் விழுந்தேன் படத்தில் “நாக்க முக்கா ” பாடல் தான். இந்த பாடலின் நடன இயக்குனராக ஸ்ரீதர் தான் பணியாற்றினார். விஜய் ஆன்டனி இசைமைத்த பிரபலமான இந்த பாடல் திரையில் நன்றாக காட்டுவதை உறுதி செய்யும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. இதன் விளைவாக ஸ்ரீதர் அந்த பாடலுக்கு சில அதிரடியான நடன அசைவுகளைக் கொடுத்தார். இந்த பாடல் வெளிவந்து பட்டி தொட்டியல்லாம் ஒலித்தது.

-விளம்பரம்-

ஸ்ரீதர் மாஸ்டர் ஹீரோவாக நடித்த படம் :-

ஸ்ரீதர் பிரபுதேவாவின் எங்கேயும் காதல் (2011) படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியதற்காக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார். அப்படத்தில் இவர் நான்கு பாடல்களுக்கு நடன இயக்கம் செய்தார். மணி கூண்டு மற்றும் நாதஸ்வரம் என்ற தொலைக்காட்சி தொடரின் தலைப்பு பாடலிலும் நடனமாடினார். 2015 ஆம் ஆண்டில், ராகவ் மாதேஷ் இயக்கிய போக்கிரி மன்னன் என்ற அதிரடி நாடகப்படத்தில் முன்னணி நடிகராக முதல் முறையாக நடித்தார். சிறிய அளவு விளம்பரத்துடன் வெளியான இப்படம் விமர்சகர்களிடமிருந்து இந்த படம் ஒரு சாதாரண படம் என்றும் திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவம் சித்தரவதையானது என்றும் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

- Advertisement -

ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக ஸ்ரீதர் :-

இவர் 2016 ஆம் ஆண்டில் சவாடி படத்திற்கு இயக்குநராக பணியாற்றினார். தற்போது முழு நேரமாக நடன இயக்குனராக பணியாற்றும் ஸ்ரீதர் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களுக்கும் நடன இயக்குனராக பணியாற்றிக் கொண்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பல நடிகர்களுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் சொல்லிக் கொடுத்து நடனமாட வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு நடனம் ஆடுவதில் கைதேர்ந்தவர் நமது ஸ்ரீதர் மாஸ்டர். அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கலில் நடுவராகவும் பல ஷோக்களில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் கூட கலர் தமிழில் ஒரு ஷோவில் சிறப்பு நடுவராக சென்றிருந்தார் ஸ்ரீதர் மாஸ்டர்.

ஸ்ரீதர் மாஸ்டர் அவர் மகள் அக்ஷராவும் :-

ஸ்ரீதர் மாஸ்டர் ஒரு ஸ்டுடியோ ஒன்று வைத்துள்ளார் இங்கு நடன பயிற்சிகள் சொல்லிக் கொடுத்து வருகிறார் ஸ்ரீதர் மாஸ்டர் தன் ஆடும் நடனங்களை யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழக்கமாக பதிவிட்டு வருவது வழக்கம். இதுபோன்ற வழக்கமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் அந்த வீடியோவில் ஸ்ரீதர் மகள் அக்ஷராவும் அவருடன் இணைந்து நடனமாடி இருந்தார். ஸ்ரீதர் மாஸ்டர் அவர் மகளும் ஆடிய நடன வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பொழுது மிகவும் ட்ரெண்டிக்காக இன்ஸ்டாகிராமில் செல்ல ஆரம்பித்தது அதன் பின்பு ஸ்ரீதர் மாஸ்டர் தன் மகளுக்கும் நடனம் சொல்லிக் கொடுத்து தனது மகளுடன் நடனமாடு அடி விழி வீடியோ வெளியிடுவதை வாடிக்கையாக செய்து கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

ஜிகாமனுவுடன் இனைந்து வெறியாட்டம் போட்ட ஸ்ரீதர் மகள் அக்ஷரா :-

இந்நிலையை ஸ்ரீதர் மாஸ்டர் மகள் அக்ஷரா அவரும் நடனத்தில் கை தேர்ந்தவராக மாறிவிட்டார். அவர் நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவிடும் வீடியோக்கள் அனைத்திலும் லைக் மற்றும் கமெண்டுகளை ரசிகர்கள் தெறிக்க விடுவார்கள். மேலும் ஜிகாமனு என்பவர் நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு எப்போதும் ட்ரெண்டிங்காக இருக்கும் ஒரு வெளிநாட்டவர். ஜிகாமனு அவரும் நடனம் ஆடுவதில் வல்லவர் ஜிகாமனு ஆடும் நடன வீடியோக்கள் அனைத்தும் நமக்கு ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் இருக்கும். சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு அந்த ஜிகாமனுவை ஸ்ரீதர் மகள் அக்ஷரா அவரது ஸ்டுடியாவுக்கு அழைத்துச் சென்று அவர்கள் இருவரும் ஒரு குத்துப்பாட்டுக்கு வெறியாட்டம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டார் . அந்த வீடியோ அவரது ரசிகர்களால் ஷேர் செய்து இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Advertisement