விஜய் டிவிக்கு எதிராக ட்விட்டர் போராட்டம்.! 4 லட்சம் பேரை திரட்டும் கமல் கட்சி நடிகை.!

0
11518
kamal

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் பல்வேறு சீசன்களை கடந்து பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடும் நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் தான். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் மா க பா மற்றும் பிரியங்கா போட்டியாளர்களை உருவ கேலி செய்வதாக பிரபல நடிகை ஸ்ரீபிரியா ட்விட்டரில் போராட்டம் ஒன்றை துவங்கியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விஜய் டிவி சூப்பர் சிங்கரில் ஒருவரின் மூக்கை கேலிசெய்வதும்,எடையை கேலிசெய்வதும் சரியில்லை,மா க பா,பிரியங்கா உங்களின் தொகுத்து வழங்கும் திறமை எனக்கு வியப்பை அளிப்பது உண்மை,நீங்கள் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொள்ளுங்கள் மற்றவரை கேலி செய்து அசிங்க படுத்த உரிமை யார் கொடுத்தது #உருவகேலியைஎதிர்போம் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : வெளியேறிய சேரனை கண்டு சிரித்த இரண்டு போட்டியாளர்கள்.! இவங்களுமா இப்படி.!

மேலும், என்னுடன் ட்விட்டரில் இனைந்து நிற்க்கும் 495.8k மக்களும் #உருவகேலியைஎதிர்போம் என்பதற்கு ஆதரவு கொடுக்கவேண்டும்,நான் பல முறை உருவ கேலிக்கு ஆளாகி வருந்தியிருக்கிறேன்,இதைப்போல கேவலமாக என்னை விமர்சித்தவரை நான் கடுமையாக கடிந்திருக்கிறேன்.உங்கள் எதிர்பை தெரிவியுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

பிரபல நடிகையான ஸ்ரீப்ரியாவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. அதே போல ஸ்ரீபிரியா பிக் பாஸ் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகையும் கூட அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் முன்னே பல்வேறு உருவ கேலி நடைபெறுகிறது. எனவே மக்கள் நீதி மையத்தில் ஒரு பொறுப்பில் இருக்கும் நீங்கள் அதையும் கண்டியுங்கள் என்று நெட்டிசன்கள் சிலர் பதிவிட்டுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.