அசுரன் தெலுங்கு ரீ – மேக். தனுஷ் மற்றும் வெங்கடேஷில் யார் சிறந்தவர் என்று ட்வீட் போட்ட சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி.

0
3175
srireddy
- Advertisement -

கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமா உலகில் பிரபலமான முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கில் பிரபலமான நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி படுக்கையை பகிர்ந்து கொண்டதாக பல நடிகர்கள் மீது குற்றச்சாட்டை எழுப்பினார். மேலும், தெலுங்கு நடிகர் மட்டுமல்லாது தமிழில் ஸ்ரீகாந்த், ராலன்ஸ் துவங்கி இயக்குனர் முருகதாஸ் வரை என பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டை சாட்டினார்.

-விளம்பரம்-

மேலும் அதற்காக “ரெட்டி லீக்ஸ்” என்ற போராட்டம் ஒன்றையும் உருவாக்கினார்.பின் இவர் தமிழ் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. தமிழ் சினிமாவிலும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் பெயரை ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். இருப்பினும் தற்போது இவர் தெலுங்கு சினிமாவிற்கு போகாமல் தமிழ் சினிமாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இதையும் பாருங்க : இணையத்தில் வைரலாகும் ‘வாழ்’ பட நடிகையின் நீச்சல் உடை புகைப்படங்கள். இவங்களா இப்படி.

- Advertisement -

சமீப காலமாக ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமாவில் இருக்கும் நடிகர்களை பற்றி மட்டும் தான் பேசி வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான ‘நாரப்பா’ படம் குறித்து ஸ்ரீரெட்டி போட்டுள்ள பதிவு வெங்கடேஷ் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று இருந்தது.

இந்த இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீ – மேக் ‘நாரப்பா’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. இதில் தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ் நடித்து உள்ளார். இந்த படம் வெளியானதில் இருந்து. இந்த படத்தை பார்த்துவிட்டு தனுஷ் மற்றும் வெங்கடேஷ் ரசிகர்கள் யார் சிறந்த நடிகர் என்ற விவாதத்தை சமூக வலைதளத்தில் துவங்கிவிட்டனர். ஆனால், தனுஷ் அளவிற்கு வெங்கடேஷ் நடித்துள்ளாரா என்பது கேள்விக்குறி தான்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, சமீபத்தில் தான் நாரப்பா படத்தை பார்த்தேன், அற்புதமான படம். நடிப்பை பொறுத்த வரை வெங்கடேஷை விட தனுஷ் தான் சிறப்பாக செய்தார். வெங்கடேஸும் நல்லா தான் நடிச்சிருக்காரு ஆனால், தனுஷுடன் ஒப்பிடும் தனுஷ் நடிப்பு தான் சூப்பர் என்று பதிவிட்டுள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த பதிவால் வெங்கடேஷ் ரசிகர்கள் பலரும் ஸ்ரீரெட்டியை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement