நிர்வாண போராட்டத்திற்கு பலன் கிடைத்தது.! நிம்மதி அடைந்த நடிகை ஸ்ரீரெட்டி.!

0
593
Srireddy

சில மாதங்களாக தெலுகு சினிமாவில் நடிகைகள் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பி வந்த நடிகை ஸ்ரீ ரெட்டி. தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்களின் பெயர்களை ஆதாரத்துடன் வெளியிட்டு வந்தார். தற்போது தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவருகிறார்.

- Advertisement -

தமிழ் சினிமா இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தொடங்கி நடிகர்கள் லாரன்ஸ், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் பற்றி முகநூல் பக்கத்தில் சர்ச்சையான பதிவுகளை கூறிவருகிறார். அதோடு சமீபத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, சமந்தா, காஜல் அகர்வால் போன்றவர்கள் பற்றியும் சர்ச்சையான பதிவை போட்டு தமிழ் சினிமாவை கதிகலங்கி வைத்து வந்தார் நடிகை ஸ்ரீரெட்டி.

தற்போது சென்னையில் தங்கி வரும் ஸ்ரீரெட்டிக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. தற்போது ரெட்டி டைரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இருப்பினும் பாதிக்கபட்ட தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடி வந்த ஸ்ரீரெட்டிக்கு ஒரு விடிவு காலம் பிறந்துள்ளது.

-விளம்பரம்-
Image result for telangana State Film Development Corporation Chairman

ஸ்ரீரெட்டியின் சொந்த ஊரான ஆந்திரா திரைப்பட துறையில், ராமமோகன் ராவ் தலைமையில் ஒரு குழு அமைத்து நடிகைகளுக்கான பிரச்சனையை தீர்க்க மையம் அமைத்துள்ளது. இதனால் தனக்கு நியாயம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ஸ்ரீரெட்டி நிம்மதி அடைந்த்துள்ளாராம்.

Advertisement