நான் அன்னிக்கி சொன்னதுக்கு அபப்டி சொன்னீங்க. இது என்ன ? போதை பொருள் விவாகரத்தில் சிக்கிய ரகுல் – வீடியோ வெளியிட்டு வெறுப்பேற்றிய ஸ்ரீரெட்டி.

0
1643
rakul
- Advertisement -

தோனி படத்தின் மூலம் உலகம் முழுதும் பிரபலமடைந்தார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அவரது தந்தை கே.கே.சிங் பீகார் போலீசில் சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா மீது புகார் அளித்ததை தொடர்ந்து, தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய 3 பிரிவுகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-
https://www.facebook.com/iamsrireddy/videos/2579105659066370

போதைப்பொருள் கும்பலுடன் நடிகை ரியாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் கடந்த மாதம் இந்த வழக்கில் ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் சோவிக் சக்ரபோர்த்தி மற்றும் பிறர் மீது போதை பொருள் கட்டுப்பாட்டு துறை, போதை பொருள் ஒழிப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதில் தமிழில் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங் பெயரையும் ரியா கூறியுள்ளார். மேலும், பிரபல பாலிவுட் நடிகரான சைப் அலிகானின் மகள் சாரா அலிகானும் போதை பொருள் பயன்படுத்திய விவாகரத்தில் தொடர்புடையதாக ரியா கூறியுள்ளார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தெலுங்கு சினிமாவின் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி, ரகுல் ப்ரீத் சிங் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்று நான் காஸ்டிங் கவுச் குறித்து பேசியபோது ரகுல் பிரீத் சிங் டோலிவுட்டில் ஃபேஸிங் ஹவுசே போதை பொருள் பயன்பாடு எதுவும் இல்லை என்று கூறியிருந்தார். அதற்கு நடிகை லட்சுமி மஞ்சு கூட ஆதரவாக பேசி இருந்தார். தற்போது ரகுல் பிரீத் சிங் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி இருக்கிறார். இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள் இது தான் கர்மா என்பதுஎன்று கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.

This image has an empty alt attribute; its file name is image-1.png

நடிகை ஸ்ரீரெட்டி ரகுல் ப்ரீத் சிங் பற்றி இப்படி பேசுவது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. சூர்யா நடிப்பில் வெளியான Ngk படத்தில் சாய் பல்லவி மற்றும் ராகுல் ப்ரீத் சிங்கின் நடிப்பு குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். அதில் சாய் பல்லவியின் நடிப்பு சிறப்பாக உள்ளது என்றும் ராகுல் ப்ரீத் சிங் தான் மிகவும் மோசமாக நடித்துள்ளார், பார்த்தாலே வாந்தி வருகிறது என்று கூறியிருந்தார். ஸ்ரீரெட்டி, ரகுல் ப்ரீத்தை இப்படி விமர்சித்ததற்கு ஒரு காரணமும் இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் #metoo விவகாரம் படு வைரலான போது ரகுல் ப்ரீத் சிங்கிடம், நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்டது.

-விளம்பரம்-

அதற்கு பதில் அளித்த அவர், அது போன்று நான் எதிர்கொண்டது இல்லை சிலர் விளம்பரத்திற்காக அப்படி செய்கிறார்கள் என்று கூறியிருந்தார். ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த பதிலால் கோபமடைந்த ஸ்ரீரெட்டி, நடிகைகளை இழிவாக நினைக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை நான் நேரில் கண்டால் செருப்பால் அடிப்பேன். இவ்வாறு அவர் பேசிகொண்டே இருந்தால் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கே சென்று அவருக்கு சமாதி கட்டி விடுவேன் என்று கடுமையாக பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement