என்னை பிடிக்கும் என்றால் இவருக்கு ஓட்டு போடுங்க.!தமிழ் பிக் பாஸ் குறித்து பதிவிட்ட ஸ்ரீரெட்டி.!

0
2498
srireddy

தமிழில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் வெற்றியாளர் யார் என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் கூடி வருகிறது. இந்த சீசனில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற நிலையில் நாளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர்வெளியேறவுள்ளார்.

Image result for sri reddy

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த ஆண்டு தெலுகு சினிமா சங்க அலுவலகம் முன்பு நிர்வாண போராட்டத்தின் மூலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். சினிமா துறையில் வாய்ப்பு தருவதாக கூறி பல்வேறு நடிகர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக பல முக்கிய நடிகர்களின் பெயரை கூறிவருகிறார். மேலும், இவர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்பதாக இருந்தது.

- Advertisement -

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் வெளியேறியதால் இந்த வாரம் நாமினேஷன் இல் இடம்பெற்ற மற்ற போட்டியாளர்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் இந்த வாரத்தில் யார் வெளியேற இருக்கிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி’என்னை பிடிக்கும் என்றால் சாண்டிக்கு வாக்களியுங்கள்’ என்று சாண்டியின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனால் சர்ச்சை நாயகி ரெட்டியின் ஆதரவு இவருக்குத்தான் என்று பலரும் கூறியுள்ளனர். இருப்பினும் இந்த வாரம் சாண்டி காப்பாற்றப்பட்டு விடுவார் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம்தான்.

-விளம்பரம்-
Advertisement