குளிர் பனியில் நடனமாட விருப்பமில்லை. இதற்கு நான் பெட்டிஷன் போட்டு கோரிக்கை வைக்கிறேன் என்று ஸ்ருதிஹாசன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக சுருதிஹாசன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், அதற்கு முன்பு இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக படத்தில் நடித்து இருந்தார்.
Well she had no problems while taking money
— DestroyeRRR ❤️🔥 (@7theDestroyeRRR) April 8, 2023
It has turned into a fashion to cry over something they have done with the consent
அதோடு தனது 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடி இருந்தார் . இவர் 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். கடைசியாக தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்து இருந்தார். அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காண முடியவில்லை. மேலும், ஸ்ருதிஹாசனுக்கு நடிப்பை தவிர இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
சுருதிஹாசன் திரைப்பயணம்:
இதனிடையே இவர் லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலை காதலித்து இருந்தார். பின் இருவரும் காதலை முறித்துக்கொண்டதாக ஸ்ருதி ஹாசன் அறிவித்தார். தற்போது ஸ்ருதி ஹாசன், சாந்தனு ஹசாரிக்காவை காதலிப்பதாக தெரிவித்தார். இவர்கள் இருவரும் 2020 ஆம் ஆண்டு முதலே ஒன்றாக வசித்து வருகிறார்கள். ஆனால், தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்றும் தாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போவது இல்லை என்றும் கூறி இருந்தார் ஸ்ருதி ஹாசன்.
சுருதிஹாசன் நடித்த படங்கள்:
இதனை அடுத்து சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் பெஸ்ட்செல்லர் என்ற வலைத்தொடர் ஆன்லைனில் வெளிவந்து இருந்தது. இதில் மிதுன் சக்ரவர்த்தி, அர்ஜன் பாஜ்வா மற்றும் கவுகர் கான் உள்ளிட்டோர் நடித்து இருந்தார்கள். இதனை தொடர்ந்து வால்டர் வீரய்யா மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வீர சிம்ஹா ரெட்டி போன்ற படங்களில் சுருதிஹாசன் நடித்து இருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி இருக்கிறது.
சுருதிஹாசன் நடிக்கும் படங்கள்:
பின் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாறன் நடிப்பில் தயாராகி வரும் சலார் என்ற படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சுருதிஹாசன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், எனக்கு பனியில் நடனம் ஆடுவது சுத்தமாகவே பிடிக்காது. அது மிகவும் கஷ்டமான ஒன்று. ஹீரோவிற்கு கோர்ட் கொடுத்து விடுவார்கள். ஆனால், எனக்கு கோர்ட், ஷர்ட், ஷால் என்று எதுவுமே கொடுக்கவில்லை. பிளவுஸ் சாரி மட்டும் தான் போட்டு நடனமாடினேன். இதை நான் ஒரு பெட்டிஷன் ஆகவே வைக்கிறேன். தயவுசெய்து இந்த மாதிரி நடனம் ஆட வைக்காதீர்கள் என்று கூறி இருக்கிறார். இப்படி சுருதிஹாசன் கூற காரணம் சமீபத்தில் வெளிவந்த சிரஞ்சீவி படத்தில் நடனம் மாடியது தான். ஆனால், இப்படி நடிக்க கோடிகளில் பணம் வாங்கி தானே நடிக்கிறீர்கள் என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதே போல ஸ்ருதி ஹாசன் குளிர் பிரேதேசங்களில் ஆட்டம் போடும் புகைப்படம், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் கோர்ட் அணிந்து இருக்கும் புகைப்படங்களை எல்லாம் பதிவிட்டு கேலி செய்து வருகின்றனர்.