ஷூட்டிங் ஸ்பாட்டில் தவறாக நடந்து கொண்டதாக அர்ஜுன் மீது அளிக்கப்பட்ட புகார் – நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு.

0
813
arjun
- Advertisement -

கன்னட நடிகை சுருதி பிரபல நடிகர் அர்ஜுன் மீது பாலியல் தொல்லை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் நடிகர் அர்ஜுன் ஒரு பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர். 90’ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை உள்ள சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு நடிகராக இருந்து வருகிறார். இப்படிபட்ட அந்தஸ்தில் உள்ள நடிகர் அர்ஜுன் மீது அவருடன் “நிபுணன்” படத்தில் இணைந்து நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை பாலியல் புகார் அளித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-
Shruthi arjun

இதுகுறித்து கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், விஸ்மயா (தமிழில் ‘நிபுணன்’) படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு மனைவியாக நடித்தபோது, நானும் அவரும் நெருங்கி நடிக்க வேண்டிய காட்சி ஒன்று இருந்தது. அந்தக் காட்சியை படமாக்குவதற்கு முன்பாக, படப்பிடிப்புத் தளத்தில் அனைவரது முன்னிலையிலும், அர்ஜுன் எனது அனுமதியின்றி என்னிடம் நெருக்கமாக வந்து என்னைத் தொட்டார்.

இதையும் பாருங்க : சித்து – ஸ்ரேயாவை தொடர்ந்து ரியல் ஜோடிகளான ரீல் ஜோடி – வெளிப்படையாக காதலை அறிவித்த அம்மன் சீரியல் நடிகை

- Advertisement -

அது எனக்கு கோபத்தை உண்டாக்கியது என்று பதிவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து நடிகர் அர்ஜுனும், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது போலீசில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  நடிகர் அர்ஜுனின் சார்பாக அவரது உறவினரும் கன்னட நடிகருமான மறைந்த நடிகர் துருவா சார்ஜா பெங்களூர் சிவில் நிதிமன்றத்தில், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு வழக்கு தொடந்தார்.

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகார் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி படக்குழுவினருக்கு பல முறை காவல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு கர்நாடக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.சுமார் 3 ஆண்டுகள் நடந்து வந்த வழக்கில் போலீசார் சார்பில் குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யவேண்டியிருந்தது. இந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தில் எந்தவிதமான சாட்சிகளும் இல்லையென்று போலீசார் ஆவணங்களை தாக்கல் செய்தனர். அதை ஏற்ற நீதிபதி போதிய, ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் அர்ஜூனை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக உத்தரவிட்டார்.

-விளம்பரம்-
Advertisement