இசை ரசிகர்கள் அனைவரும் FM ஸ்டேஷனுக்கு போன் செய்து தங்களுக்கு விருப்பமான பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் தமிழ் டிவி நிகழ்ச்சியில் வீடியோ ஜாக்கி என்று அறிமுகம் செய்து தமிழ் ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது எஸ்எஸ் மியூசிக் தான். சன்மியூசிக் தொடங்குவதற்கு முன்பாகவே துவங்கப்பட்ட இந்த தொலைக்காட்சியில் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என்று பல்வேறு விதமான மொழிகளின் பாடல்களும் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு வி ஜெக்கள் தொகுத்து வழங்கினார்கள்.
தொலைக்காட்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விதமான வீடியோ ஜாக்கிகள் பிரபலமானவர்கள் அதில் மிகவும் பிரபலமான பெண் தொகுப்பாளினியாக இருந்தவர் பூஜா தான். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட மாடல் அழகியான இவர் 2004 ஆம் ஆண்டு மிஸ் கோயம்புத்தூர் என்ற அழகிப் பட்டத்தை வென்றார். அதன்பின்னர் 2005 ஆம் ஆண்டு மிஸ் கேரளா என்ற அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். அதன்பின்னரே எஸ் எஸ் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார்.
இதையும் பாருங்க : பொது மேடையில் நடிகையின் துப்பட்டாவில் வியர்வையை துடைத்த சல்மான் கான். வைரலாகும் வீடியோ.
அதுமட்டுமல்லாது பூஜா கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் நண்பன் பீசா,காஞ்சனா 2 போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் தெலுங்கில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். எஸ் எஸ் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த பூஜா அதே தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த கிரேக் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடந்து விட்டது. சமீபத்தில் பூஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் இருக்கும் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனை கண்ட நடிகை டாப்ஸி, உன்னை பார்த்தால் பெருமையாக இருக்கிறது. உன்னுடைய Abs நன்றாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பூஜா, நன்றி இதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படும் என்பது உங்களுக்கு தெரியும். வாழ்க்கையில் ஒரு முறையாவது வைத்துவிட வேண்டும் என்பது எனது ஆசை என்று பதிவிட்டுள்ளார்.