இரண்டாம் கணவருடன் லிப் லாக் மற்றும் பிக்கினி உடையில் பிரபல Vj பூஜா. இவர் முதல் கணவர் யார் தெரியும்ல.

0
5213
pooja
- Advertisement -

சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் பூஜா ராமச்சந்திரனுக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.

-விளம்பரம்-

‘SS மியூசிக்’ என்ற டிவி சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா பயணத்தை துவங்கினார் பூஜா ராமச்சந்திரன். அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்தார் பூஜா ராமச்சந்திரன். அது தான் ‘காஞ்சனா’ என்ற சீரியல். முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் பூஜா நடித்த இந்த ‘காஞ்சனா’ எனும் ஹாரர் த்ரில்லர் ஜானர் சீரியல் ஒளிபரப்பானது.

இதையும் பாருங்க : என்னடா, நீயே கூறு பத்து ருவானு விக்க ஆரம்பிச்சிட்ட – மாஸ்டர் 50rs டிக்கெட்டை கேலி செய்த அஜித் ரசிகர் – வலிமை படத்தை குறிப்பிட்டு திரையரங்கம் பதிலடி.

- Advertisement -

அதன் பிறகு சின்னத் திரையுடன் நமது பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை பூஜா ராமச்சந்திரன், அடுத்ததாக வெள்ளித் திரையிலும் நுழைந்தார். தமிழில் ‘காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பீட்சா, நண்பேன்டா, காஞ்சனா 2, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், களம்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார் பூஜா ராமச்சந்திரன்.2010-ஆம் ஆண்டு ‘SS மியூசிக்’ புகழ் VJ க்ரேயிக்கை திருமணம் செய்து கொண்டார் நடிகை பூஜா ராமச்சந்திரன்.

பின்னர் 2017-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்ட பூஜா ராமச்சந்திரன், நடிகர் ஜான் கொக்கனை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் தனது இரண்டாம் கணவருடன் பூஜா லிப் லாக் அடித்த புகைப்படமும், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement