உடலை குறைத்ததும் அருண் விஜய் கெட்டப்பிற்கு மாறிய சிம்பு.! செம் லுக் இதோ.!

0
1712
Simbhu

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை பற்றிய தகவல்கள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தற்போது சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தில் சிம்புவின் உடல் எடையைக் கண்டு பலரும் கிண்டல் செய்தனர் இதை எடுத்து சிம்பு லண்டன் சென்று உடல் எடை சிகிச்சை மேற்கொண்டு வந்தார் அதன் மூலம் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய சிம்புவாக மாறியுள்ளார்

- Advertisement -

இந்த நடிகர் சிம்பு ஒரு புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் சிம்பு, அருண் விஜய் வைத்த அதே ஹேர் ஸ்டைலில் இருக்கிறார். இந்த சிம்புவின் இந்த புதிய லுக்கை கண்டு அவரது ரசிகர்கள் வியந்து போய்யுள்ளனர்.

சிம்பு தற்போது ஹன்சிகா நடித்து வரும் ‘மஹா’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அந்த திரைப்படத்திற்காக தான் சிம்பு இப்படி ஒரு லுக்கில் மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் மகா திரைப்படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்ள இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement