வெற்றுடம்பில் ‘வெந்து தணிந்தது காடு’ சிம்பு – ஒரே மாதத்தில் 15 கிலோ குறைத்து வேற லெவல் லுக்.

0
1713
Str
- Advertisement -

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிம்பு கடந்த சில வருடங்களாகவே உடல் எடை கூடி குண்டாக இருந்து வந்தார். இதனால் இவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது. ஆனால், நீண்ட இடைவெளிக்கு பின் இவருக்கு ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படம் ஒரு நல்ல கம் பேக் ஆக அமைந்தது. ஆனால், அந்த படத்திற்கு பின்னர் வெளியான ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தைப் பெற்றது.

-விளம்பரம்-
Image

இந்த இரண்டு படங்களிலும் சிம்பு படு குண்டாக இருந்தார். இதனால் இவரது ரசிகர்களாலே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பின்னர் மாநாடு படத்தில் கமிட் ஆன சிம்பு தனது உடல் எடையை குறைக்க லண்டன் சென்றிருந்தார் சிம்பு. கொஞ்சம் காலம் அங்கேயே தங்கி உடல் எடையை குறைத்து வேற லெவலில் திரும்பினார். உடல் எடை குறைத்த கேப்பில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்தார்.

இதையும் பாருங்க : ஒத்த செருப்பு இந்தி ரீ – மேக்கிற்கு வாரிசு நடிகரை தேர்வு செய்துள்ள பார்த்திபன் – கொஞ்சம் சவாலான விஷயம் தான்.

- Advertisement -

ஆனால், அந்த திரைப்படமும் மாபெரும் தோல்வியடைந்தது. இப்படி ஒரு நிலையில் கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. அதில், அடையாளம் தெரியாத அளவு வேற லெவல் தோற்றத்தில் இருந்தார் சிம்பு. மேலும், இந்த படத்திற்காக மீண்டும் உடல் எடையை குறித்துள்ளாராம் சிம்பு.

அதுவும் ஒரே மாதத்தில் 15 கிலோவை குறைத்து உள்ளாராம். சமீபத்தில் இந்த படத்தின் கெட்டப்பில் வெறும் உடம்புடன் எடுத்த புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் சிம்பு. அதை பார்த்த ரசிகர்கள் பலரும் சிம்புவின் டெடிகேஷனை பார்த்து வியந்து போய்யுள்ளனர். இது ஒருபுறம் இருக்க இந்த படத்திற்கு ரெட் கார்ட் கொடுத்துள்ள பஞ்சாயத்து ஒருபுறம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement