ஒத்த செருப்பு இந்தி ரீ – மேக்கிற்கு வாரிசு நடிகரை தேர்வு செய்துள்ள பார்த்திபன் – கொஞ்சம் சவாலான விஷயம் தான்.

0
736
parthiban
- Advertisement -

சமீப காலமாகவே இந்தி பல்வேறு தமிழ் படங்கள் ரீ – மேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படமும் இந்தியில் ரீ – மேக் ஆக இருக்கிறது. இந்த படத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்த நிலையில் தற்போது அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமா திரை உலகில் வித்தியாசமான முறையில் கதைகளை கொடுப்பதில் திறமை வாய்ந்தவர் நடிகர் பார்த்திபன். இது மட்டும் இல்லைங்க இவர் சினிமா துறையில் தனக்கென ஒரு பாதையும் உருவாக்கியவர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-2-1024x682.jpg

இவர் சினிமா உலகில் நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் பணிபுரிந்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தன்னுடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக “ஒத்த செருப்பு சைஸ் 7” என்ற படத்தில் நடித்து இருந்தார்.இந்த படத்தில் பார்த்திபன் ஒன் மேன் ஆர்மி போல நடித்து இருந்தார். அதாவது வேறு எந்த ஒரு நபரின் முகமோ,உருவமோ தெரியாது.

- Advertisement -

அதுவும் இந்த படத்தில் பார்த்திபன் அவர்கள் நம்ப ‘அந்நியன் விக்ரம்’ போல மாறி, மாறி பேசி நடித்திருக்கும் காட்சிகள் திரையரங்குகளை அதிர வைத்தது என்று கூட சொல்லலாம். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை இந்தியிலு எடுக்க திட்டமிட்டிருந்தார் பார்த்திபன். மேலும், இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருந்தார் பார்த்திபன். படத்துக்குப் பொருத்தமான இந்திப் பெயரை கூறுங்கள் என சில மாதங்கள் முன்பு ரசிகர்களிடம் யோசனை கேட்டு இருந்தார்.

இதில் பேட்ட வில்லன் நவாஸுதீன் நடிப்பதா கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் அபிஷேக் பச்சன் நடிக்க இருக்கிறார். என்னதான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மகனாக இருந்தாலும் அபிஷேக் பச்சினால் ஒரு சிறந்த நடிகர் என்ற பெயரை எடுக்க முடியவில்லை. மேலும், அபிஷேக் பச்சன் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை என்றொரு அவப்பெயர் அவருக்குண்டு. ஒத்த செருப்பு உணர்வுகளை முகத்தில் பிரதிபலிக்க வேண்டிய படம். பார்த்திபன் இந்த சவாலை எப்படி சமாளிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-விளம்பரம்-
Advertisement