பல ஆண்டுக்கு முன் தன்னுடன் நடித்த நடிகையை பார்க்க ஆசைப்பட்டுள்ள அஜித் – உதவி செய்துள்ள மஞ்சு வாரியர்

0
2957
Ajith
- Advertisement -

அஜித்தின் ஆசையை நடிகை மஞ்சு வாரியர் நிறைவேற்றி இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடுமையான உழைப்பினாலும், விடாமுயற்சியினாலும் சினிமா உலகில் இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளார் தல அஜித். இவர் இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவிலும் ரசிகர்களை கொண்டவர். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளிலும் சாதனை புரிந்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், தமிழ் சினிமாவில் அஜித் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்கிறது. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. ஆனால், விமர்சன ரீதியாக இந்த படம் தோல்வியடைந்தது. இதனை அடுத்து வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்தை எடுத்து இருக்கிறார்கள்.

- Advertisement -

துணிவு படம்:

இந்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தை ரெட் ஜெயின்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. இப்படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூறியிருந்தனர். இந்த நிலையில் அஜித்தின் ஆசையை நடிகை மஞ்சுவாரியர் நிறைவேற்றி இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அஜித்தின் நடிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று அசல்.

அஜித் ஆசை:

இந்த படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை பாவனா நடித்திருந்தார். அதனால் துணிவு படத்தின் படபிடிப்பு சமயத்தில் அஜித் அவர்கள் பாவனாவிடம் பேச வேண்டும் என்று மஞ்சுவாரியர் இடம் கூறியிருக்கிறார். உடனே மஞ்சுவாரியரும் பாவனாவிற்கு கால் செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு கால் ரீச் ஆகவில்லை. இதை அறிந்த பாவனா சில நாட்கள் கழித்து சென்னை வந்திருக்கிறார்.

-விளம்பரம்-

பாவனா பதிவு:

அப்போது அவர் துணிவு படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அஜித் மற்றும் மஞ்சுவாரியரை சந்தித்து பேசி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவர்களுடன் இணைந்து மதிய உணவையும் சாப்பிட்டிருக்கிறார். அதன் பின் அஜித்தின் பிறந்தநாள் அன்று பாவனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, இது என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத நாள் என்று கூறி இருக்கிறார்.

அஜித் குறித்து சொன்னது:

அது மட்டும் இல்லாமல் பாவனா ஒரு பேட்டியில் அஜித் குறித்து கூறியிருந்தது, நான் அவருடன் எப்பவோ நடித்த நடிகை. ஆனால், அவர் இன்னும் என்னை ஞாபகம் வைத்து என்னை நலம் விசாரித்து இருக்கிறார். இதை நினைத்தால் எனக்கு சந்தோசமாக இருக்கிறது. இவரின் இந்த குணத்தால் தான் இவரை அனைவரும் கொண்டாடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த செய்தியை தான் தல ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

விடாமுயற்ச்சி

இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. ஏகே 62 படம்: பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி ஏகே இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும், நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தினுடைய டைட்டில் போஸ்ட்டர் வெளியாகி இருக்கிறது.

Advertisement