ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் ஸ்டண்ட் சில்வா குடும்பத்தை சேர்ந்தவர் பலி..! புகைப்படம் இதோ!

0
1116
Stunt-silva
- Advertisement -

பல மாதங்களாக நடைபெற்று வரும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போரட்டம் இன்று 100 வது நாளை எட்டியது. நீண்ட நாட்களாக போராட்டமாக இருந்த இந்த மக்கள் பிரச்சனை இன்று கலவரமாக மாறியது. அதுமட்டுமல்லாமல் இந்த போராட்டத்தில் 11 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்(கொல்லப்பட்டனர்)

-விளம்பரம்-

- Advertisement -

தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பிரச்னையால் , பல்வேறு தரப்பு மக்களும் , அரசியல் பிரமுகர்களும் அரசுக்கு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் உயிரிழந்த 11 பேரில், பிரபல சினிமா சண்டை இயக்குனரின் தங்கையின் கணவரும் உயிரிழந்துள்ளார்.

சண்டை இயக்குனர் சில்வா, சினிமாவில் பல படங்களில் சண்டை இயக்குனராக பணியாற்றியவர். மேலும் இவர், அஜித் நடித்த “என்னை அறிந்தால்” , விஜய் நடித்த “ஜில்லா” போன்ற படங்களில் சண்டை இயக்குனராக பணியாற்றியதுடன், அந்த படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்தும் உள்ளார்.

-விளம்பரம்-

இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில், இவரது தங்கையின் கணவர் குண்டடி பட்டு பரிதாபமாக யுரிழந்துள்ளார். இந்த தகவலை சண்டை இயக்குனர் சில்வா, தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement