மருத்துவமனையில் திடீரென்று கவுண்டமணியை சந்தித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் – அவரே பதிவிட்ட புகைப்படம்.

0
1945
goundamani
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை மன்னனாக பட்டைய கிளப்பியவர் நடிகர் கவுண்டமணி. ஒரு காலத்தில் இவர் காமெடியில் கொடி கட்டி பறந்தவர். இவர் முதலில் நாடகத்தில் நடித்து தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு சினிமாவில் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வந்தார். இவருடைய காமெடி இருந்தால் தான் அந்த படம் ஹிட்டாகும் என்ற நிலைமை தமிழ் சினிமாவில் இருந்தது. சினிமா உலகில் துவக்க காலங்களில் தனியாகத் தான் நகைச்சுவை நடிகராக நடித்தார். பின் செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார்.

-விளம்பரம்-

இவர் இதுவரை 450 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். இவர் படங்களில் நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் வில்லன், குணச்சித்திர நடிகர், நடிகர் என பல வேடங்களில் நடித்து இருந்தார். மேலும், சமீபத்தில் இவர் தனது 81 வது பிறந்தநாளை கொண்டாடினார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக் டவுனில் இருப்பதால் வெளியில் வராமல் வீட்டிலேயே தனது பிறந்தநாளை கொண்டாடினார் கவுண்டமணி.

- Advertisement -

இருந்தாலும் இவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரது பிறந்தநாளுக்கு “ஹேப்பி பர்த் டே டே என்று அவர் பட காமெடியை பதிவிட்டு வாழ்த்துக்கூறி மகிழ்ந்தனர். இந்நிலையில் நடிகர் கவுண்டமணியை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று இந்திய கிரிக்கெட் வீரர் தனது டீவ்ட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இந்நிலையில், கவுண்டமணியை இன்று எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தமிழகத்தை சேர்ந்த பத்ரிநாத் அவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஆவார். கவுண்டமணியை இன்று எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்ததாக கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இது குறித்து அவர் பதிவிட்டிருப்பது, நான் இன்று பல் மருத்துவரை பார்க்க சென்றேன். சென்ற இடத்தில் தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியை பார்த்தேன். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் சந்திக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement