ஆமா, எனக்கு வயசாகிடிச்சி தான். என்ன 16 வயசு மாதிரியே இருப்பாங்களா- கடுப்பான ஸ்வாதி.

0
48715
swati
- Advertisement -

சசி குமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான “சுப்பிரமணியபுரம்” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் புதுமுகமாக அறிமுகமானவர் ந நடிகை ஸ்வாதி. முதலில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான “டேஞ்சர்” படத்தில் கதநாயகியாக அறிமுகமாகி இருந்தார். தமிழ், தெலுங்கு,மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வந்த ஸ்வாதி, தெலுங்கில் ஒரு சில படங்களில் பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.

-விளம்பரம்-

தமிழில் இதுவரை பெரிய நடிகர்களுடன் நடிக்கவில்லை என்றாலும் ஜெய்,கிருஷ்ணா போன்ற 2 ஆம் நிலை ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இதுவரை தமிழில் “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலா குமாரா, வடகறி, யட்சன் ” போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது அழகே இவரது கொஞ்சம் எடுப்பான கோரை பற்களும், சற்று பூசலான உடல் அமைப்பும் தான். ஆனால் சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், கொஞ்சம் உடல் எடை கூடிவிட்டார் இந்த இளம் நடிகை. இறுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘திரு’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : அஜித் ஒரே பீட்டர் விட்டாரு. விஜய் அப்படியே பாத்தான். வனிதா சொன்ன செம்ம பிளாஷ் பேக்.

தமிழ், தெலுங்கு என்று பல்வேறு படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்வாதி விமான பைலட் விகாஸ் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டு ஸ்வாதி திருமணத்திற்கு பின்னர் தனது கணவருடன் இந்தோனேசியாவில் செட்டில்ஆகிவிட்டார். நடிகை ஸ்வாதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் முன்பைவிட கொஞ்சம் படு ஒல்லியாக மாறிஇருந்தார் . இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

-விளம்பரம்-

ஸ்வாதி உடல் எடையை குறைத்ததால் பல்வேறு கேலி கிண்டலுக்கு உள்ளானார். இதனால் த்னது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் கமன்ட் பகுதியை ஆப் செய்து உள்ளார். மேலும், இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஸ்வாதி, நான் என்னுடைய கருத்து பகுதியை முடக்கி வைத்திருப்பதை எத்தனை பேர் கவனித்தீர்கள் என்பது தெரியவில்லை அப்படி ஒரு பொது இடத்தில் என்னுடைய செல்போன் நம்பரை கொடுத்து விட்டு பின்னர் அதன் மூலமாக வரும் தவறான அழைப்புகளை எண்ணி நான் வருத்தப்பட விரும்பவில்லையோ அதே போலத்தான் இங்கும். நான் என்னுடைய கமெண்ட் பகுதியை சற்று ஓபன் செய்து விடலாம் என்று யோசிப்பேன். ஆனா,ல் அது ஆரோக்கியமான கருத்தாக இருக்கும் வரை தான் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், தனது உருவத்தை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள ஸ்வாதி, என்னுடைய சகாக்கள் நான் எப்படி இருக்கிறேன் என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ஆனால், 34 வயதில் இதுதான் நான் என்பதை நான் ஏற்றுக்கொள்ள தான் ஆகவேண்டும். நானும் ஒரு மனுஷி தான். என்னுடைய உருவத்தை பார்த்து எனக்கு வயதாகிவிட்டது, நான் சோர்வாக தெரிகிறேன் இல்லை உடைந்து போனதாக தெரிகிறேன் என்றெல்லாம் கமெண்ட் செய்பவர்களுக்கு நான் வளர்ந்துவிட்டேன் என்பதை எண்ணி பெருமை அடைகிறேன் என்பதையும் நான் உயிரோடு இருக்கிறேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன். என்னால் 16 வயது பெண்ணை போல தற்போதும் காட்சியளிக்க முடியாது எனக்கு வயது ஆகிறது என்பதை நான் நேர்மையாக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement