கோவில் தரிசனத்தை காண ரயில்நிலையத்திற்கு புர்கா அணிந்து சென்ற ஸ்வாதி – விமர்சனங்களுக்கு கொடுத்த விளக்கம்.

0
1705
Swathi
- Advertisement -

சசி குமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான “சுப்பிரமணியபுரம்” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் புதுமுகமாக அறிமுகமானவர் ந நடிகை ஸ்வாதி. முதலில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான “டேஞ்சர்” படத்தில் கதநாயகியாக அறிமுகமாகி இருந்தார். தமிழ், தெலுங்கு,மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வந்த ஸ்வாதி, தெலுங்கில் ஒரு சில படங்களில் பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.

-விளம்பரம்-

தமிழில் இதுவரை பெரிய நடிகர்களுடன் நடிக்கவில்லை என்றாலும் ஜெய்,கிருஷ்ணா போன்ற 2 ஆம் நிலை ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இதுவரை தமிழில் “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலா குமாரா, வடகறி, யட்சன் ” போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது அழகே இவரது கொஞ்சம் எடுப்பான கோரை பற்களும், சற்று பூசலான உடல் அமைப்பும் தான். ஆனால் சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், கொஞ்சம் உடல் எடை கூடிவிட்டார் இந்த இளம் நடிகை.

- Advertisement -

இறுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘திரு’ என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு என்று பல்வேறு படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்வாதி விமான பைலட் விகாஸ் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டு ஸ்வாதி திருமணத்திற்கு பின்னர் தனது கணவருடன் இந்தோனேசியாவில் செட்டில் ஆகிவிட்டார்.

சமூக வளைத்ததில் ஆக்டிவாக இருக்கும் ஸ்வாதி அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். சமீபத்தில் கூட இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணவரின் புகைப்படங்களை எல்லாம் நீக்கி இருந்தார். இதனால் ஸ்வாதி தனது கணவரை விவாகரத்து செய்யப்போகிறாரா என்று சர்ச்சையும் கிளம்பியது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் சுவாதி கோவிலுக்கு சென்று இருந்தார் அப்போது ரயில் பயணத்தின் போது ‘புர்கா’ அணிந்தவாறு சென்று இருந்தார்.

-விளம்பரம்-

இதனை கண்ட ரசிகர்கள் பலர் பல விதமான கமெண்டுகளை போட்டு வந்தனர் இதற்கு விளக்கமளித்த அவர் ‘ என் புர்கா எனக்கு மிகவும் ஸ்பெஷல். அது எப்போதும் அழகான நினைவுகளை கொடுத்து இருக்கிறது. safety pin போட்டது போல பாதுகாப்பாக இருக்கிறது. தரிசனத்தை காண விடியற்காலையில் எழுந்ததை யாரும் பார்க்க முடியாது. சிறப்பு ரயில்கள் 3 மணி நேரம் தாமதமாகிவிட்டது. ஒரு வேளை நான் அப்படியே போனால் என்னால் மசாலா லெமன் சோடாவை சாப்பிட முடியாது. தெரியாத நபர்களின் புன்னகைகளை காண முடியாது. இது எல்லாம் எனக்காக தான்’ என்று கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ஸ்வாதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் முன்பைவிட கொஞ்சம் படு ஒல்லியாக மாறி இருந்தார். ஸ்வாதி உடல் எடையை குறைத்ததால் பல்வேறு கேலி கிண்டலுக்கு உள்ளானார். இதனால் த்னது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் கமன்ட் பகுதியை ஆப் செய்து இருந்தார். இதுகுறித்து விளக்கமளித்த அவர் ‘என்னால் 16 வயது பெண்ணை போல தற்போதும் காட்சியளிக்க முடியாது எனக்கு வயது ஆகிறது என்பதை நான் நேர்மையாக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறிஇருந்தார்.

Advertisement