சில வருடங்களுக்கு முன் பாடகி சுசித்ரா குறித்து சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்தது அனைவருக்கும் தெரிந்தது தான். அது மட்டுமில்லாமல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சுச்சி லீக்ஸ் போய் ஸ்ரீ லீக்ஸ் வந்தது என்றும் பல விமர்சனம் செய்து வந்தார்கள் நெட்டிசன்கள். இவர் ஆர்ஜே சுச்சி என்று பரவலாக அறியப்பட்டவர் சுசித்ரா. இவர் தமிழகத்தை சேர்ந்த வானொலி ஒலிபரப்பாளர் ஆவார். மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார். அதுவும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியுள்ளார். ஆரம்பத்தில் ரேடியோ மிர்ச்சியாக பணியாற்றிய இவர் தற்போது ரேடியோ ஒன் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். மேலும், பாடகி சுசித்ரா அவர்கள் ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார். பாடகி சுசித்ரா திரைப்படங்கள், விழாக்கள் என்று பரபரப்பாக இருந்தவர்.
இதனைத்தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து “சுசி லீக்ஸ்” என்ற பெயரில் தனுஷ், விஜய் டிவி டிடி, ஹன்சிகா, திரிஷா, ஆண்ட்ரியா, சின்மயி, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலரின் அந்தரங்க வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியானதால் சினிமா திரையுலகமே அதிர்ந்து போனது. இதையடுத்து பாடகி சுசித்ரா கூறியது, தனது டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து உள்ளார்கள். அதிலிருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்கள் என்று கூறி இருந்தார். மேலும்,அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் இது ஹேக்கர்களின் வேலை இல்ல சுசித்ராவின் வேலையாக தான் என்றும் கூறி வந்தார்கள். மேலும், அவருக்கு மனநிலை சரியில்லை என்றும் அப்போது தகவல் வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக சுசித்ராவின் கணவர் கார்த்திக் அவரை விவாகரத்து செய்தார்.இந்நிலையில் தன்னுடைய விவாகரத்துக்குப் பிறகு பாடகி சுசித்ரா அவர்கள் தனது குடும்பத்திலிருந்து விட்டு விலகி அடையாரில் உள்ள வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். இதனைத்தொடர்ந்து கடந்து 4 நாட்களுக்கு முன்பு அவர் காணாமல் போய் விட்டதாக அவருடைய தங்கை சுஜிதா அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பாடகி சுசித்ராவை போலீசார் தேடி வந்தார்கள். பின் சென்னை தி. நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து சுசித்ராவை மீட்டனர். மேலும்,இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் சுசித்ரா அவர்கள் கூறியது ,’என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் குடும்பத்தினர் நடத்துகிறார்கள். அதனால் தான் வீட்டில் இருந்து விலகி தனியாக வாழ்ந்து வந்தேன்.
இப்போது அங்கேயும் இருக்கப் பிடிக்காததனால் தான் ஹோட்டலில் தங்கி இருக்கிறேன் என்று கூறியதாக ஒரு தகவல் வந்துள்ளது. பின் அவர் மன அழுத்தத்தில் இருப்பதால் தற்போது மருத்துவமனையில் சேர்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதை தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் சுசித்ரா கூறியது, நான் மாயமானதாக கூறி பொய்யான புகாரை போலீசில் அளித்துள்ளனர். இப்போது என்னை மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக அனுப்பி உள்ளனர். மாயம் ஆகவில்லை ஓட்டலில் சென்று ஓய்வெடுத்தேன். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்த சுசித்ராவின் தங்கை சுஜித்தாவிடம் போனில் தொடர்பு கொண்டபோது அவர் சரியாக பதில் கூறாமல் மறுத்து விட்டார். மேலும், ஒரு வாரம் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்ததாக தெரியவந்துள்ளது. அவர் அந்த ஓட்டலில் என்ன செய்து கொண்டிருக்கிறார்? யாருடன் இருந்தார்? என்ற தகவல் மர்மமாகவே இருக்கிறது. அது மட்டுமில்லாமல் சுசித்ராவே ஒரு மர்மம் தான் என்றும் விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.