6.5 லட்சம் வரி கட்ட இப்படி புலம்பணுமா? ரஜினிக்கு பிரசன்னாவை உதாரணம் காட்டிய சர்ச்சை பிரபலம்.

0
11191
rajini
- Advertisement -

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து ரஜினி போட்ட மேல் முறையீட்டு மனு விஷயம் கடந்த இரண்டு தினங்களாக பேச்சும் பொருளானது. நடிகர் ரஜினிக்கு கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா திருமணம் மண்டபம் இருந்து வருகிறது. இந்த மண்டபத்திற்கு கடந்த 2019 முதல் 2020 ஆம் ஆண்டிற்கான சொத்துவரி கடந்த பிப்ரவரி மாதம் செலுத்தப்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்திற்கான சொத்துவரியாக ரூபாய் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி ரஜினிக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-95.jpg

மேலும் அந்த வரியை வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் அப்படி தவறினால் 2% வட்டி அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் மாநகராட்சி அளித்த இந்த நோட்டீஸை எதிர்த்து ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி பி.டி ஆஷா தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினி தரப்பில் வாதாடுகையில் கொரோனா தோற்று பரவலால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை திருமண மண்டபம் செயல்படவில்லை என்றும், இந்த மாதங்களில் நடப்பதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு அதற்கான தொகையை பதிவு செய்து இருந்த நபர்களிடமே திருப்பி கொடுக்கப்பட்டதாகவும் விவாதிக்கப்பட்டது.

- Advertisement -

30 நாட்களுக்கு மேலாக வளாகம் காலியாக இருந்தால், வரி நிவாரணம் அளிக்க உதவுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், இதனை ஏற்க்க மறுத்த நீதிபதி, மாநகராட்சியின் நோட்டீசுக்கு செப்டம்பர் 23-ஆம் தேதி பதிலளித்துவிட்டு உடனடியாக நீதிமன்றத்தை அவசரகதியில் அனுகியது ஏன்? என்றும் இது போன்று மனுவை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததால் அபராதம் விதிக்கப்போவதாக நீதிபதி எச்சரித்ததைத் தொடர்ந்து தனது மனுவை வாபஸ் பெற்று கொள்வதாக ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது .இப்படி ஒரு நிலையில் ட்வீட் ஒன்றை செய்துள்ள ரஜினி, “ராகவேந்திரா மண்டப சொத்து வரி… நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். #அனுபவமே_பாடம் என்றுகுறிப்பிட்டு இருந்தார்.

கல்யாண மண்டபத்திற்கான சொத்து வரி ரூ. 6.56 லட்சத்தை அபராதா தொகையான அபராதம் 9386 ரூபாயுடன் செலுத்தி இருந்தார் ரஜினி, இப்படி ஒரு நிலையில் ரஜினியின் இந்த வரி விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ள பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா ‘உங்கள் சொந்த காரணம் ஒரு பொது காரணத்தை விட பெரிதாகும்போது. அதற்கான வித்தியாசத்தை நீங்கள் சொல்ல முடியவில்லை என்றால் நீங்கள் ஒரு அரசியல்வாதியாக இருக்க முடியாது’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement