சர்ச்சை ஏற்படுத்திய சுசித்ராவின் கணவருக்கு இப்படி ஒரு நோயா..? அவரே சொன்ன உண்மை

0
1519
- Advertisement -

தற்போது வேண்டுமானல் தெலுங்கு சினிமாவில் நடிகை ஸ்ரீரெட்டி, சினிமா பிரபலங்களின் அந்தரங்க விஷயங்களையும், புகைப்படங்களையும் ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் வெளியிட்டு பிரபலமாக இருக்கலாம். ஆனால், இந்த லீக்ஸ் விஷயத்தில் இவருக்கும் முன்னோடியாக இருந்தவர் பிரபல தமிழ் பின்னணி பாடகியான சுஜி என்னும் ஆர்.ஜே சுஜித்ரா.

Suchitra-Karthik

கடந்த 2017 ஆம் ஆண்டு ட்விட்டரில் சுஜி லீக்ஸ் என்ற பெயரில் பல்வேறு நடிகர்,நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டார் . பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தை யாரோ ஒருவர் ஹக் செய்துவிட்டார் என்று கூறி சுஜி லீக்ஸ் சர்ச்சையில் இருந்து தப்பித்துக் கொண்டார். இவர் ஆரம்பத்தில் பிரபல வானொலி நிலையம் ஒன்றில் ,வானொலி ஒலிபரப்பாளராக இருந்து வந்தார். மேலும், தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழித் திரைப்படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

- Advertisement -

ஆர்.ஜே சுஜித்ரா 2005 ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்தும் ஆனது. நடிகர் கார்த்திக் தமிழில் “யாரடி நீ மோகினி” , “பொய் சொல்ல போறோம்” போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் காத்திக்கிற்கு புற்று நோய் என்று விக்கிபீடியாவில் யாரு பதிவிட்டுள்ளார்.

இந்த தகவளை கண்டு அதிர்ச்சியடைந்த நடிகர் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு புற்று நோய் இல்லை என்று விளக்கமளித்துள்ளார் “எனக்கு புற்று நோய் இருப்பதாக யாரோ ஒருவர் விக்கிப்பீடியாவில் பதிவேற்றம் செய்துள்ளார். புற்று நோய் என்று பதிவிட்டதற்கு பதிலாக ஆஸ்கார் என்று பதிவிட்டிருந்தால் நான் மிகவும் சந்தோசப்பட்டிருப்பேன்” என்று நக்கலாக பதிலைத்துள்ளார்.

Advertisement