பருத்திவீரன் பஞ்சாயத்தில் இழுத்துவிட்ட ஞானவேல் ராஜா – சுதா கொங்கரா வெளியிட்ட உண்மை.

0
401
- Advertisement -

பருத்திவீரன் சர்ச்சை குறித்து நடிகை சுதா கொங்கரா பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் அமீர்-ஞானவேல் ராஜா சர்ச்சை தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த ஜப்பான் படத்தின் விழாவில் கார்த்தியை வைத்து படம் இயக்கிய பல இயக்குனர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால், அமீர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து பேட்டியில் அமீர், ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை. அதனால் நானும் போகவில்லை.

-விளம்பரம்-

பருத்திவீரன் படத்தின் வெற்றியால் தான் கார்த்திக் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். சிவக்குமார், சூர்யா, கார்த்திக் குடும்பத்துடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் எங்களுடைய நட்பை கெடுத்து விட்டார். அவரால் எனக்கு இரண்டு கோடிக்கும் மேல் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் காரணம். அவரிடம் எனக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து பேசியும் நீதி கிடைக்கவில்லை என்று கூறி இருந்தார். இதன் பின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, பருத்திவீரன் படத்தை நானாக தயாரிக்கவில்லை. அதுவும் அமீருக்காக தான்.

- Advertisement -

அமீர் குறித்து சொன்னது:

அமீர் என்னிடம் பல லட்சங்கள் கடன் வாங்கி இருக்கிறார். அதனை கொடுக்க முடியாமல் தான் பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் அவர் இயக்கி கொடுப்பதாக சொன்னார். சுமார் 2 கோடி பட்ஜெட்டில் ஃபர்ஸ்ட் காபி தருவதாக சொல்லிவிட்டு இரண்டு வருடங்களில் 4 கோடி வரை செலவு செய்தார். அப்போது அமீர் பருத்திவீரன் எடுத்த பட்ஜெட்டில் 4 படங்களை தயாரித்திருக்கலாம். இப்போதும் அவர் சொன்னால் எத்தனை பேர் முன்னிலையிலும் பருத்திவீரன் பிரச்சனை குறித்து நான் பேச தயார். அவருக்கு அவ்வளவு சீன் எல்லாம் கிடையாது. இனி அமீர் இந்த விஷயம் குறித்து பேசிக் கொண்டே இருந்தால் நானும் விடமாட்டேன் பதிலடி கொடுப்பேன்.

அமீர்-ஞானவேல் ராஜா விவகாரம்:

என்னை மட்டும் இல்லாமல் இன்னும் சில தயாரிப்பாளர்களிடமும் பணம் வாங்கிக் கொண்டு அமீர் மோசடி செய்து இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இந்த விவகாரம் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதனை அடுத்து பிரபலங்கள் சிலர் அமீருக்கு ஆதரவாகவும் சிலர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் இது தொடர்பாகஅளித்த பேட்டியில் ஞானவேல் ராஜா, அமீர் குறித்து பல குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த பிரச்சனையில் இயக்குனர் சுதாவை இழுத்து விட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

பேட்டியில் ஞானவேல் ராஜா:

அதில் அவர், சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் கார்த்தி, சுதா கொங்கராவுடன் சேர்ந்து அமீரின் ‘ராம்’ படத்தை பார்த்தோம். கார்த்திக்கிற்கு படம் பெரிதாக பிடிக்கவில்லை. இயக்குனர் சுதா கொங்கராவும், மேக்கிங்கும் வரலை, ஒன்னும் வரலை என்று சொன்னதாக பேசி இருந்தார். இதனால் நெட்டிசங்கள் பலரும் சுதாவை விமர்சித்து கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் சுதா கொங்கரா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், அமீர் அண்ணாவிடம் இருந்து எனக்கு பிப்ரவரி 2, 2016 அன்று தொலைப்பேசி அழைப்பு வந்தது. நான் பிரசாத் ஸ்டூடியோவிற்கு வெளியே காரில் சென்று கொண்டிருந்தேன்.

இயக்குனர் சுதா கொங்கரா பதிவு:

எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது. ஏனெறால், இறுதிசுற்றுக்காக எனக்கு முதன்முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அவரும் ஒருவர். அப்போது அவரிடம் ஒரேயொரு விஷயம் தான் சொன்னேன். என் படத்தில் வந்த மதியின் கதாபாத்திரம் முத்தழகின் பாதிப்பு தான் என்று. ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாபாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல்முறை என்று அவரிடம் கூறினேன். என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்திவீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாறு தான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில் தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை. இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம். நன்றி என்று கூறி இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement