சன் தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பித்த சன் மியூசிக் தொலைக்காட்சியில் வி ஜே-கள் அறிமுகமான காலத்தில் பல்வேறு வீடியோ ஜாக்கிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தனர். ஆனந்த கண்ணன், ப்ரஜன், ஐஸ்வர்யா போன்ற பல வீஜேக்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்கள். அந்த வகையில் வசீகரமான தோற்றத்துடன் பல இளசுகளின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் தொகுப்பாளினி ஹேமா சின்ஹா.
சன் ம்யூசிக் ஆரம்பித்த ஆரம்ப காலகட்டம் முதல் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த இவர், ரசிகர்களின் அபிமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். சன் ம்யூசிக்கிற்கு பின்னர் ஒரு சில நிகழ்ச்சிகளை கூட தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவரை எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் காண முடியவில்லை.
தொகுப்பாளினியாக ஹேமா சின்ஹா ராஜு முருகன் என்ற திரைப்பட இயக்குனரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். ராஜு முருகன் வேறு யாரும் இல்லை. தமிழில் தினேஷ் நடிப்பில் வெளியான ‘குக்கூ’ படத்தை இயக்கியவர் தான். மேலும், இவர் இயக்குனர் லிங்குசாமியிடம் 3 ஆண்டுகள் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
குக்கூ படத்தை தொடர்ந்து ‘ஜோக்கர் ‘ படத்தையும் இயக்கினார் ராஜு முருகன். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஜோக்கர்’ படம் வெளியான சில நாட்களில் தான் திருமணம் செய்யவிருப்பதாக இயக்குநர் ராஜூமுருகன் தெரிவித்திருந்தார். இதையடுத்து இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
இவ்விருவரின் திருமணம் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி பெசன்ட் நகரில் உள்ள கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்றது. இருவரின் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டார்கள். தற்போது ஹேமா சின்ஹா தனது குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார்.