பிரபல தொகுப்பாளினி தாப்பாவிற்கு திடீர் திருமணம்.! மாப்பிள்ளை யார் தெரியுமா.!

0
746
Thappa

ஆதித்யா தொலைக்காட்சியில் பல்வேறு லைவ் ஷோக்களில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தொகுப்பாளினி ஷர்மிளா தாப்பா. நேபாள குடும்பத்தில் இருந்து கடந்த 2004 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த இவர், அர்ச்சனா மூலமாக ஆதித்யா தொலைக்காட்சியில் ஆடிஷனில் பங்குபெற்றார்.

தாப்பா

நேபாளத்தில் இருந்து வாந்தாலும் தமிழை சரளமாக பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் தாப்பா. ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய பின்னர் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதுவரை அஜித் நடித்த`வேதாளம்’, `விஸ்வாசம்’ என சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்க : சன் மியூசிக் ஹேமா சின்ஹாவா இது.! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.! 

இப்போதும், ஆதித்யா சேனலில் தொகுப்பாளராக கலக்கிக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுககள சென்னையில் வசித்து வரும் தாப்பா பேட்டிகளில் அங்கேற்கும் அவருக்கு எப்போது திருமணம் என கேட்டும், எந்தவித பதிலும் சொல்லாமல் இருந்தார். இந்த நிலையில் தனது திருமண அறிவிப்பை அறிவித்துள்ளர் தாப்பா.

தாப்பா

தாப்பா திருமணம் செய்து கொண்டுள்ள நபரின் பெயர் ரகு இவர் பிருந்தா மாஸ்டர் பாபா மாஸ்டர் என பல்வேறு நடன இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர்கள் இருவரது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் இன்று (ஜூன் 6)காலை நடைபெற்றது.

இன்று காலை சென்னை அமைந்தகரையில் உள்ள ஓர் அம்மன் கோயிலில் ரகு என்பவரை உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார். அவருடைய திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சியை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு திருமண மஹாலில் ஏற்பாடு செய்துள்ளார். இதையடுத்து விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்த திருமண வரவேற்பில் திரையுலக மற்றும் தொலைக்காட்சி சேர்ந்த பல நபர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

தனது திருமணம் குறித்து பேசியுள்ள தாப்பா, எங்க வீட்ல பர்மிஷன் வாங்கத்தான் இத்தனை வருஷம் காத்திருந்தோம். இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்திருக்கு. பெரியவர்கள், நல்லவர்களின் ஆசீர்வாதம் எப்போதும் எங்களுக்கு வேண்டும். ரசிகர்களுக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.