விஜய் 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல டிவி.! அப்போ அடிக்கடி போடா மாட்டாய்ங்க.!

0
811
Vijay 63

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தனது 63 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த தெறி, மெர்சல் ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ளதாள் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார், மேலும், சக நடிகர்களாக பரியேறும் பெருமாள் புகழ் கதிர், காமெடி நடிகரான விவேக், யோகி பாபு மற்றும் ரோபோ ஷங்கரின் மகளும் நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது.

- Advertisement -

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் வட சென்னையில் உள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படம் வரும் தீபாவளி பண்டிகை அன்று வெளியாக உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் நிறுவனம் பெரும் தொகையை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் இறுதியாக ‘சர்க்கா’ர் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் வசூல் ரீதியாக சன்பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பெரும் லாபத்தை ஏற்படுத்தி தந்தது. எனவே, விஜய் 63 படத்தின் உரிமையை போட்டிபோட்டு வாங்கியுள்ளது சன் நிறுவனம். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement