இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. இதை தான் செய்து கொண்டு இருக்கிறேன். அண்ணாமலை சீரியல் நடிகையின் தற்போதைய நிலை.

0
113220
manjari
- Advertisement -

நடிகை குட்டி பத்மினி மூலம் சின்னத்திரை சீரியலில் நுழைந்தவர் நடிகை மஞ்சரி. இவர் முதன் முதலாக உறவுகள் என்ற சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். ச்சீ இவள் எல்லாம் ஒரு பெண்ணா? எதற்கு நீ இருக்கிறாய் ? என்று கேவல கேவலமாக திட்டும் குடும்ப பெண்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கொண்டவர். ஆமாங்க, நாம பார்க்க போறது நடிகை மஞ்சுரி பற்றி தான். மஞ்சுரி யார்? இவங்க என்ன பண்றாங்க? தற்போது என்ன செய்க்கிறார்? என்பதை பற்றி பார்க்கலாம்..

-விளம்பரம்-
Related image

- Advertisement -

நடிகை மஞ்சுரி அவர்கள் உறவுகள், கோலங்கள், அண்ணாமலை உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தவர். இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் பிற மொழி சீரியல்களிலும் நடித்து உள்ளார். இவருக்கு பல வருடங்களுக்கு முன்னால் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு இவர் தமிழ் சீரியலை விட்டு விலகிவிட்டார். தற்போது ஒரு பேட்டியில் அவரிடம் கேட்ட போது நடிகை மஞ்சுரி கூறியது, என்னுடைய சொந்த ஊர் சிங்கப்பூர். நான் முதல் முதலாக உறவுகள் என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானேன். இந்த சீரியலுக்கு பிறகு எனக்கு நிறைய சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. தமிழில் மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் நடித்து வந்தேன். கிட்டத்தட்ட நான் 50க்கும் மேற்பட்ட சீரியலில் நடித்து உள்ளேன்.

இதையும் பாருங்க : கமல், தமிழை பல ஸ்லாங்கில் பேசி பார்த்திருப்பீங்க. ஆனால், தெலுங்கில் பல ஸ்லாங்கில் பேசி பார்த்துள்ளீர்களா

எனக்கு பாசிட்டிவ்,நெகட்டிவ் என்று எந்த ரோல் கொடுத்தாலும் நடிப்பேன். ஆனால், எல்லோருமே எனக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் தான் நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள். அதோடு நெகட்டிவ் கதாபாத்திரம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்படுவார்கள். சில சமயம் கதாநாயகிகளை விட நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கு தான் பாப்புலர் அதிகம். மேலும், அந்த கதாபாத்திரத்துக்கு தான் மக்களிடம் அதிக வரவேற்பும் கிடைக்கும். எனக்கு எப்பவுமே சீரியல்ல அழுகுற காட்சிகள் வந்தால் பிடிக்காது. ரொம்ப கஷ்டமாக இருக்கும். ஏன்னா, நான் கொஞ்சம் தைரியமான பொண்ணு தான். மக்கள் எங்களை திட்டுவது தான் எங்களுக்கு பலமே.

-விளம்பரம்-
actress-manjari

அந்த அளவிற்கு எங்களோட கதாபாத்திரத்தை அவர்கள் கவனிக்கிறார்கள் என்று அர்த்தம். நான் கர்ப்பிணியாக இருக்கும்போது கோலங்கள் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தேன். பின் சீரியல் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எங்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்ததற்கு பிறகு என்னால் சீரியலில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதற்கு பிறகு நான் சிங்கப்பூரிலேயே செட்டில் ஆகிவிட்டேன். நான் என்னுடைய கேரியரை விடவில்லை. மீண்டும் சிங்கப்பூரில் உள்ள சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அது மட்டுமில்லாமல் தமிழ் சீரியலில் நடிக்க எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது. ஆனால், இப்போது வரை எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. முன்னாடி நான் கொஞ்சம் குண்டா இருந்தேன்.

இப்போ ஒல்லியா, ஹேர் கட் பன்னிட்டு இருக்கேன். இப்போ நிறைய வித்தியாசங்கள் என்னிடம் இருக்கு. நிறைய பேர் இந்த கேள்வி கேட்டாங்க.எல்லோரும் சீரியலில் பிரேக் எடுப்பது வழக்கமான ஒன்று. ஆனால், மீண்டும் வாய்ப்பு கிடைப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. எங்களுக்கு ஒரே ஒரு பொண்ணு. எங்க வீட்டுக்கு ரொம்ப செல்லம். அவளும் ஸ்கூல்ல நடக்கிற டிராமாவில் கலந்துக் கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் அவள் என்ன ஆகும்ன்னு ஆசைப்பட்டாலும் அதை செய்வது எங்களுடைய கடமை. தமிழ் சீரியல்ல மீண்டும் நடிக்க எனக்கு ஆசையாக இருக்கு. வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன் என்று கூறினார்.

Advertisement