கமல், தமிழை பல ஸ்லாங்கில் பேசி பார்த்திருப்பீங்க. ஆனால், தெலுங்கில் பல ஸ்லாங்கில் பேசி பார்த்துள்ளீர்களா

0
7939
balram-naidu
- Advertisement -

சினிமா உலகில் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் உலக நாயகன் கமலஹாசன். நடிகர் கமலஹாசன் அவர்கள் தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து உள்ளார். மேலும், இவர் சினிமா துறையில் நுழைந்து 60 ஆண்டுகள் ஆகியது. இவர் சினிமா துறையில் புரிந்த பல சாதனைகளை புரிந்தவர். கமலஹாசன் அவர்கள் இந்தியத் திரைப்பட நடிகர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னனிப் பாடகர், நடன அமைப்பாளர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர்.

-விளம்பரம்-

சினிமா திரை உலகில் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார் நடிகர் கமலஹாசன். இவருடைய நடிப்பு திறமைக்காக இவர் வாங்காத விருதுகளே இல்லை. இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகளவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனால் தான் இவரை உலகநாயகன் கமலஹாசன் என்று தான் அழைக்கிறார்கள். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இது அனைவருக்கும் தெரிந்தது. அந்த வகையில் இவர் தெலுங்கில் நடித்து உள்ள ஒரு படத்தின் காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்த காட்சியில் நடிகர் கமலஹாசன் அவர்கள் தெலுங்கு மொழியில் ஐந்து விதமான சிலங்கில் பேசி அசத்தி உள்ளார். கமல்ஹாசன் அவர்கள் தமிழில் பல சிலங்கில் பேசுவார் என்பது தெரியும். அதோடு அவர் பேசியதை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால், அப்போதே தெலுங்கில் 5 சிலங்கில் பேசியிருக்கிறார். 1978 ஆம் ஆண்டு வெளி வந்த “மரோ சரித்ரா” படத்தில் தான் இந்த காட்சி வந்தது. இது உண்மையாகவே வியக்க வைக்கிற விஷயம். யாராலும் இந்த அளவிற்கு செய்ய முடியாது. அதனால் தான் இவர் தற்போது சினிமா உலகில் இத்தனை ஆண்டுகளாக முன்னணி நடச்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார்.

மேலும், நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தன்னுடைய நடிப்பின் மீது அதிக ஆர்வமும் திறமையும் கொண்டவர். தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘இந்தியன் ‘ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நீண்ட வருடங்களுக்கு(25) பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக போய் கொன்டு உள்ளது. மேலும், இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். ராக்கிங் ஸ்டார் அனிருத் அவர்கள் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement