சத்தமில்லாமல் திருமணம், தற்போது தடபுடலாக Reception நடத்திய அழகு சீரியல் நடிகை.

0
8507
sahana
- Advertisement -

அழகு சீரியல் நடிகை சஹானாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவிடுகிறது. அதிலும் சன் தொலைக்காட்சி தான் சீரியல்களின் அரசனாக இருந்து வருகிறது. தொலைக்காட்சி சீரியல்கள் பொறுத்த வரை சன் டிவி தான் இல்லத் தரசிகளின் ஒரே சாய்ஸ்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் நிறைவடைந்த ‘அழகு’ சீரியல் இல்லத் தரசிகள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த தொடரில் ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ், ஐஸ்வர்யா உல்ட்டா பலர் நடித்தனர். இந்த தொடரில் ரேவதியின் மகளாக நடித்து வந்தார் சஹானா. ஆனால், இவர் பாதியில் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

இதையும் பாருங்க : அதிர்ச்சி செய்தி, 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் காலமானார்.

- Advertisement -

இதுகுறித்து தெரிவித்த அவர், இந்த சீரியலில் முதலில் இயக்குனர்கள் என்னிடம் நடிகை ரேவதிக்கு லீடு கொடுக்கும் கதையில் நடிக்க உள்ளீர்கள் என்று சொல்லிதான் கூப்பிட்டார்கள்.உங்கள் கேரக்டருக்கு தான் ரொம்ப முக்கியத்துவம் இருக்குன்னு சொன்னார்கள்.ஆனால், எபிசோடுகள் செல்ல செல்ல என் கேரக்டர் எனக்கே ரொம்ப போரடிக்கிற மாதிரி தோன்றியதால் இந்த சீரியலில் இருந்து விலகியதாக கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இவருக்கு திடீர் திருமணம் நடைபெற்று இருந்தது. சஹானா, புதுச்சேரியை சேர்ந்த அபிஷக் என்ற மருத்துவாராக பணியாற்றி வருகிறார். திருமணத்தை நெருங்கிய சொந்தங்கள் மத்தியில் மிகவும் சிம்பிளாக முடித்த இந்த தம்பதி சமீபத்தில் திருமண வரவேற்பை கோலாகலமாக நடத்தியுள்ளனர். இந்த விழாவில் மணமக்கள் ஆட்டம் போட்டபடி என்ட்ரி கொடுத்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement