-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு தொலைக்காட்சி

கோலங்கள் சீரியல் நடிகை ஆர்த்தியா இது.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..

0
66713
AArthi

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியலில் கோலங்கள், தென்றல் சீரியலும் ஒன்று. மேலும்,கோலங்கள் ஆர்த்தி என்றால் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டார்கள். அந்த அளவிற்க்கு ‘ஆர்த்தி’ கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும்,இவர் சினிமா உலகில் ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், என்னவளே’ போன்ற திரைப்படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும், பல பேருக்கு ஆர்த்தி என்று தான் தெரியும். ஆனால், இவர் உண்மையான பெயர் ‘ஸ்ரீவித்யா’. அதோடு ஜில்லுனு ஒரு காதல் படத்தில் கதாநாயகி ஜோதிகாவுக்கு சப்போர்ட்டிங் கதாபாத்திரத்தில் ஸ்ரீவித்யா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்களிடையே அதிகமாக பேசப்பட்டார்.

-விளம்பரம்-

பின்னர் இவர் சீரியலில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தார். ஸ்ரீவித்யா டிவியில் ஒளிபரப்பான சிவசக்தி, முந்தானை முடிச்சு, கோலங்கள், ஆனந்தம், தென்றல் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக அனைவரின் மனதையும் ஈர்த்தது கோலங்கள் சீரியல் ஆர்த்தி கதாபாத்திரம் தான். மேலும்,இவர் தென்றல் சீரியலில் சாருலதா என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஸ்ரீவித்யாவிடம் பிடித்தது என்னவென்று கேட்டாலே அவருடைய உருண்டை விழிகள், கோபமான முக பாவனைகள் என்று தான் அனைவரும் சொல்வார்கள். இதன் மூலம் தான் இவர் மக்களிடையே அதிக பிரபலமானர். ஸ்ரீவித்யா சினிமா படம், சீரியல் என ரொம்ப பிசியாக இருக்கும் நிலையில் கூட தன்னுடைய படிப்பை விடாமல் எம்.பி.ஏ. வரை படித்து முடித்தார்.

இதையும் பாருங்க : சேரனுக்கு ஆறுதலாக ட்வீட் போட்ட விவேக்..விவேக்கையும் விட்டு வைக்காத கவிலியா ஆர்மி..

இப்படி சினிமா துறையிழும்,சீரியலிலும் பிஸியாக இருந்து கொண்டிருக்கும் போது ஸ்ரீவித்யா தன்னுடைய உறவுக்காரரையே திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஸ்ரீவித்யா சில காலம் நடிப்பிற்கு பிரேக் விட்டு இருந்தார். மேலும், இவர் குடும்பம், குழந்தை என்று இவருடைய வாழ்க்கை பாதையை மாறியது என்று கூட சொல்லலாம். “ருசி கண்ட பூனை அடுப்பங்கரை விடாது” என்ற பழமொழிக்கேற்ப நடிப்பில் பல பாராட்டுகளை வாங்கிய ஸ்ரீவித்யா அவர்கள் மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். தற்போது இவர் “சித்திரம் பேசுதடி, கைராசிக் குடும்பம்” ஆகிய சீரியல் மூலம் சின்னத்திரைக்கு மீண்டும் ரீ-என்ட்ரி ஆனார். இப்படி போய்க்கொண்டிருக்கும் போது சொந்தமாக தொழில் செய்யலாம் என்ற முடிவில் உள்ளார் ஸ்ரீதிவ்யா.

Image result for kolangal aarthi real name
-விளம்பரம்-

தற்போது இவர் சீரியலுக்கு முழுவதுமாக குட்பாய் சொல்வதற்காக சொந்த தொழில் செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கி விட்டார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. மேலும்,இவர் வெளிநாடுகளில் செம்ம சூப்பராகவும்,பிஸியாகவும் இருக்கும் “கிளவுட் கிச்சன்” என்னும் கான்செப்டில் சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்று திட்டம் செய்துள்ளார். மேலும்,அதை தற்போது வெற்றிகரமாக நிர்வகித்தும் வருகிறார் ஸ்ரீவித்யா. இந்த ஹோட்டல் தொடங்கியதற்கு காரணம் சென்னையில் தங்கி படிக்கும், வேலை பார்க்கும் பாச்சலரஸ் பசங்களுக்கு நல்ல வாய்க்கு ருசியான சாப்பாடு கிடைப்பது ரொம்ப அரிது. அந்த நோக்கத்தில் தான் இந்த ஹோட்டலை நாங்கள் உருவாக்கினோம் என்று கூறியிருந்தார்கள். தற்போது சென்னையில் துவங்கிய ஹோட்டலை நிர்வாகம் செய்து கொண்டும், டிவி சீரியல்களில் நடித்தும் வருகிறார் நடிகை ஸ்ரீவித்யா.

-விளம்பரம்-
-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news