பகுத்தறிவு பத்திலாம் பாடம் எடுக்குற Dr.ஷர்மிளாக்கே இந்த நிலமை – கேலிக்கு உள்ளான ரோஜா சீரியல். வீடியோ இதோ.

0
1351
rojaserial
- Advertisement -

தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் இருந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சின்னத்திரை தொடர்கள் அமைந்துள்ளது. குறிப்பாக கொரோனா லாக் டவுனில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சீரியலை விரும்பி பார்த்து வருகிறார்கள். மேலும், தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என்று பல சேனல்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

-விளம்பரம்-

இருந்தாலும் டிஆர்பியில் சன் டிவி முதலிடத்தை பிடித்து விடும் என்பதில் அய்யமில்லை. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடைப்போடும் தொடர்களில் ‘ரோஜா’ சீரியலும் ஒன்று. இந்த சீரியல் டிஆர்பியிலும், மக்கள் மனதிலும் முதல் இடத்தைப் பிடித்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் ரோஜா சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் ரோஜா.

- Advertisement -

ரோஜா சீரியல் நடிகர்கள்:

இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. ரோஜா சீரியலில் ஹீரோவாக சிபு சூர்யனும், ஹீரோயினாக பிரியங்கா நல்காரியும் நடிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தொடரில் ஹீரோ, ஹீரோயினுக்கு நிகராக வில்லியும் நடிக்கிறார். இந்த சீரியலில் தற்போது வில்லி என்ற கதாபாத்திரத்தில் அக்சயா நடிக்கிறார். மேலும், இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு உள்ளது என்றே சொல்லலாம்.

உண்மையான வாரிசு யார்?:

சீரியலில் தங்கள் குடும்பத்தின் உண்மையான வாரிசு யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் அன்னபூரணி குடும்பத்தினர் உள்ளனர். அதற்கு செண்பகமும், ரோஜாவும் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதற்காக காரில் கிளம்பிப் போகிறார். டிஎன்ஏ டெஸ்ட் சால்ட் எடுத்தால் தான் மாட்டிக்கொள்ளுவோம் என நினைத்து அனு பல திட்டங்களை போடுகிறார். அதையெல்லாம் அர்ஜுன் முறியடிக்கும் முயற்சியில் இருக்கிறார்.

-விளம்பரம்-

வைரலாகும் ரோஜா சீரியல் காட்சி:

இப்படி சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ரோஜா சீரியல் குறித்த வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. அப்படி என்ன அந்தக் காட்சி இருக்கிறது என்றால், கடந்த வாரம் ரோஜாவை கொலை செய்யும் முயற்சி நடக்கிறது. அதற்கு அர்ஜுனும் ரோஜாவும் சேர்ந்து ஒரு திட்டம் போடுகிறார்கள். அதற்கு ரோஜாவிற்கு பதில் வேறு ஒரு பெண்ணினுடைய முகத்தில் ரோஜா முகம் போன்று மாற்றுவார்கள். இப்படி சின்னத்திரையில் அசால்டாக எந்த ஒரு ஹாஸ்பிடல் இல்லாமல், சர்ஜன் இல்லாமல் முகத்தை மாற்றுவது குறித்த காட்சி வரும்.

கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்:

இதை பார்த்த நெட்டிசன்கள் பங்கமாக மீம்ஸ் போட்டு ரோஜா சீரியலை கலாய்த்து வருகிறார்கள். தற்போது சோஷியல் மீடியாவில் ரோஜா சீரியலின் இந்த காட்சி வீடியோ பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. மேலும், இப்படி எல்லாம் முகத்தை அசால்டாக மாற்றுவது இருந்தால் எல்லோரும் ஈசியாக மாற்றிவிடுவார்கள். மருத்துவமனைகள் தேவையில்லை, காசு தேவை இல்லை என்றும் ஒரு லாஜிக்கோட சீரியலை எடுங்கடா என்றும் கிண்டல் செய்திருக்கிறார்கள்.

Advertisement