சன் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? யாருக்கு அதிக சம்பளம் ?

0
3303
- Advertisement -

சன் டிவி சீரியல் நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை சீரியல் பக்கம் சென்று விட்டார்கள். குறிப்பாக, தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இதனால் ரசிகர்கள் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை பார்க்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி இருக்கிறது. மேலும், ஒவ்வொரு சேனலும் புது புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் முதல் இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி திகழ்கிறது.

- Advertisement -

சன் டிவி சீரியல் :

அதேபோல் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி சீரியல் தான் முன்னிலை வகுத்து வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் கயல், எதிர்நீச்சல், வானத்தைப்போல, இனியா, மிஸ்டர் மனைவி போன்ற தொடர்கள் தான் டி ஆர் பி யில் டாப்பில் இருக்கிறது. இந்த நிலையில் சன் டிவி சீரியலில் நடிக்கும் நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் பட்டியல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

சைத்ரா ரெட்டி:

இவர் யாரடி நீ மோகினி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். தற்போது கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

-விளம்பரம்-

கேப்ரியல்லா-:

டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் கேப்ரியல்லா. அதன் பின் இவர் வெள்ளி திரையில் சில படங்களில் நடித்திருந்தார். தற்போது சுந்தரி சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் கேப்ரியல்லா. இவர் ஒரு நாளைக்கு 12000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

ஆல்யா மானசா:

ராஜா ராணி தொடரின் மூலம் அனைவர் மனதையும் கொள்ளையடித்தவர் ஆலியா. தற்போது இவர் சன் டிவியில் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். இவர் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

பாப்ரி கோஸ்:

சன் டிவியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் தொடர்களில் ஒன்று பாண்டவர் இல்லம். இந்த தொடரில் கதாநாயகியாக பாப்ரி கோஸ் நடிக்கிறார். இவர் ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

Advertisement