நீண்ட இடைவெளிக்கு பின் சீரியலில் ஹீரோவாக களமிறங்கிய ராகவ் – ஜோடி இந்த நடிகையாம்.

0
3085
Raghav
- Advertisement -

சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் தொடர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல ஆண்டு காலமாக மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக தொலைக்காட்சி திகழ்கிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படங்கள், நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் சமீப காலமாக தொலைக்காட்சித் தொடர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே சீரியலுக்கு பெயர் போன சேனல் சன் டிவி. அந்த அளவிற்கு பல சூப்பர் ஹிட் தொடர்களை சன் டிவி வழங்கி இருக்கிறது. காலை 10 மணியில் இரவு இரவு வரை விடாமல் தொடர்கள் ஒளிபரப்பி வருகிறார்கள்.

இதையும் பாருங்க : நெல்சன் – ரஜினியின் ‘ஜெயிலர்’ கதை இதுதானா – வெளியான சுவாரசிய தகவல் இதோ.

- Advertisement -

சன் டிவி சீரியல்கள்:

இடையில் ஒரு மூன்று மணி நேரம் மட்டும் தான் படங்கள் ஓடும். இதனால் எப்போதுமே சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எல்லாம் டிஆர்பி யில் முன்னிலையில் வகித்து வருகிறது. தற்போது சன் டிவியில் கயல், ரோஜா, வானத்தைப்போல, சுந்தரி, எதிர்நீச்சல், அன்பே வா, கண்ணான கண்ணே போன்ற பல சூப்பர் ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

பூவே உனக்காக தொடர் :

இந்த தொடர்கள் எல்லாமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் தான் சன் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் கொடுத்த பூவே உனக்காக தொடர் முடிவடைந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. மேலும், இந்த சீரியல் முடிவடைந்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம். இருந்தாலும் தற்போது சன்டிவி ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

புது சீரியல் குறித்த தகவல்:

அதாவது, தற்போது சன் டிவியில் ஒரு புதிய தொடரை ஒளிபரப்புகிறார்கள். அந்த சீரியலின் பெயர் செவ்வந்தி. இந்த புதிய தொடர் தான் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் 90 களில் தொடர்களிலும், படங்களிலும் கலக்கிய நடிகர் ராகவ் தான் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் சினிமா துறையில் நடிகர் மட்டுமல்லாமல் மியூசிக் கம்போஸ்ஸர், தொகுப்பாளர், இயக்குனர் என பல முகங்களைக் கொண்டவர்.

சீரியல் குறித்த தகவல்:

நடிகர் ராகவ் ஒரு சிறந்த டான்ஸர் என்பது ராகவ் தெரிந்ததே. இவரை அடுத்து சீரியலில் நடிகை திவ்யா ஸ்ரீதர் ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே சன் டிவி சீரியல்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றபடி இந்த தொடர் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் என்ற தொடர் ஒளிபரப்பப்படும் என்றும் கூறப்படுகிறது

Advertisement