நெல்சன் – ரஜினியின் ‘ஜெயிலர்’ கதை இதுதானா – வெளியான சுவாரசிய தகவல் இதோ.

0
671
jailer
- Advertisement -

ஜெயிலர் படத்தின் கதை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், உறவுகளின் பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார்.

இதையும் பாருங்க : முதல் குழந்தையை பெற்றெடுத்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை – குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்.

- Advertisement -

தலைவர் 169 படம்:

மேலும், இந்த படம் நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- அனிரூத் கூட்டணியில் உருவாக இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதற்கான வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதை அவரே அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

படத்தின் பெயர் போஸ்டர்:

இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உட்பட நெல்சன் படங்களில் ஆஸ்தான நடிகர்கள் பலரும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள். மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது. அதற்கான போஸ்டர் சமீபத்தில் தான் வெளியாகி இருக்கிறது. இதை ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஜெயிலர் படம் குறித்த தகவல்:

இந்த போஸ்டருக்கு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை ரஜினி மற்றும் படக்குழுவிற்கு தெரிவித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் நடிக்குமாறு ஐஸ்வர்யாராயை படக்குழுவினர் அணுகி இருந்தனர். இருந்தாலும் அவர் நடிப்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஏற்கனவே பீஸ்ட் படம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில் ஜெயிலர் படத்தை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்ற முடிவில் நெல்சன் உறுதியாக இருக்கிறார். அதனால் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை வடிவமைத்து வருகிறார்.

ஜெயிலர் படத்தின் கதை :

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் கதை குறித்த செய்தி சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டு இருக்கின்றது. அதாவது, ஜெயிலர் படத்தில் சிறையில் இருக்கும் ஒரு தீவிரவாதியை தப்பிக்க வைக்க வெளியிலிருந்து ஒரு நபர் வருகிறார். அவரை தடுக்க ஜெயிலர் போராடுவது தான் கதை. அந்த தீவிரவாதி கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் என்றும், ஜெயிலராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement