சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட எவர் க்ரீன் சீரியல் மீண்டும் ஒளிபரப்பும் பிரபல சேனல் – உற்சாகத்தில் ரசிகர்கள்

0
1282
thendral
- Advertisement -

சன் டிவியில் சூப்பர் ஹிட் கொடுத்த சீரியலை மீண்டும் கலர்ஸ் தமிழில் மறு ஒளிபரப்பு செய்ய இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல ஆண்டு காலமாக சின்னத்திரை சீரியல்கள் மக்களின் மத்தியில் அதிக பேராதரவை பெற்று வருகின்றது. அதுமட்டும் இல்லாமல் 2000 ஆம் ஆண்டு சாட்டிலைட் தொலைக்காட்சி அதிகரிக்க தொடங்கிய காலத்தில் பொழுதுபோக்கிற்கு என்ன செய்வதென்று புரியாமல் இருந்தபோதுதான் சீரியல்கள் அதிகமாக ஒளிபரப்பப்பட்டது. இதற்கு முன்பு தினமும் ஒரு எபிசோடு என்று சீரியல் ஒளிபரப்பாகாது. திங்கள்கிழமை ஒரு எபிசோடு ஒளிபரப்பானால் அதன் தொடர்ச்சி அடுத்த வாரம் திங்கட்கிழமை தான் பார்க்க முடியும்.

-விளம்பரம்-

ஆனால், தற்போது நாள் முழுவதும் சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. இதனால் மக்கள் பலரும் சின்னத்திரையை விரும்பி பார்க்கிறார்கள். அதிலும் சமீபகாலமாக ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பு செய்து இருக்கிறார்கள். அதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை சீரியலை விரும்பி பார்த்து வருகிறார்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஒரு சில சீரியல்கள் என்றும் மக்கள் நினைவிலிருந்து மாறாமல் இருக்கிறது.

- Advertisement -

தென்றல் சீரியல்:

அந்த வகையில் எவர்கிரீன், சூப்பர் ஹிட் கொடுத்த சீரியலில் ஒன்று தென்றல். இந்த தொடர் சன் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பப்பட்டு இருந்தது. 2009ஆம் ஆண்டு தொடங்கி ஆறு வருடங்கள் இந்த தொடர் ஒளிபரப்பாகி இருந்தது. அதோடு 1340 எபிசோடுகளை கடந்து இருக்கிறது. இந்த தொடரில் நடித்த ஹீரோ, ஹீரோவை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். துளசி மற்றும் தமிழ் கதாபாத்திரம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று தான் இருக்கிறது. சின்னத்திரையின் செல்லப்பிள்ளை, ஹீரோவாக தமிழ் கதாபாத்திரத்தில் நடித்தவர் தீபக்.

thendral

தென்றல் சீரியல் குறித்த தகவல்:

அதேபோல் கதாநாயகியாக அழகி ஸ்ருதி நடித்து இருந்தார். அப்பா ரோலில் நடிகர் சுபலேகா சுதாகர் நடித்திருந்தார். மேலும், இந்த சீரியலில் பயங்கர வில்லியாக ரோஜா ஸ்ரீ நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் தான் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு இருந்தது. தொடக்கத்தில் இந்த சீரியலில் மூன்று பெண்களின் கதை என்று ஆரம்பித்தார்கள். பின் சீரியல் போகப்போக துளசி என்ற கதாபாத்திரம் படும் பல கஷ்டங்களை அழகாக காண்பித்து இருந்தார்கள். பின் துளசிக்கும் தமிழுக்கும் இடையேயான காதல், இவர்களின் திருமணம் இதெல்லாம் பரபரப்பாக சென்றது.

-விளம்பரம்-

தென்றல் சீரியலில் நடித்த நடிகர்கள்:

அதிலும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்வது, இவர்களின் காதல் எபிசோடுகள், திருமணமானாலும் பெண்களுக்கு படிப்பு முக்கியம் என்று பல விஷயங்களை காண்பித்து இருந்தார்கள். இதனால் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்தது. நாடகத்தில் பல விஷயங்களை இயல்பாக நடப்பது போலவே காண்பித்திருந்தார்கள். ஆகவே, இன்றும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துக் கொண்டு தான் இருக்கிறது. தற்போது இந்த சீரியலில் நடித்த தீபக் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தென்றல் சீரியல் மறு ஒளிபரப்பு :

அதேபோல் சுருதி சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தாலாட்டு என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மனதை விட்டு எப்போதும் நீங்காத மலரும் நினைவுகளை தரும் தென்றல் சீரியல் தற்போது கலர்ஸ் தமிழில் மீண்டும் கொண்டுவரப்போகிறார்கள். மே 16ஆம் தேதி முதல் கலர்ஸ் தமிழில் மதியம் 2 மணிக்கு தென்றல் சீரியல் மறு ஒளிபரப்பு செய்ய இருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் குஷியில் இருக்கிறார்கள்.

Advertisement