வெளியாயினது சிம்பு-சுந்தர்.சி படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் பற்றிய அப்டேட்..!

0
402
Simbhu

கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார் நடிகர் சிம்பு. சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் மாஸான ஒரு ரீ என்ட்ரியை கொடுத்தார்.

இதை தொடர்ந்து முதன் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதை தொடர்ந்து சுந்தர் சி வுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்திற்காக இரவு பகலாக நடிகர் சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறாராம். சமீபத்தில் வெளியான தகவலின்படி இந்த படத்திற்கு “V” என்ற எழுத்தில் தொடங்கும் தலைப்பை வைத்துள்ளாரகலாம்.

சமீபகாலமாக அஜித் நடித்து வந்த படங்கள் அனைத்தும் ‘V’ என்ற வார்த்தையில் தொடங்கும் தலைப்பினை வைத்து வந்தனர். சிம்புவும் தீவிர அஜித் ரசிகர் என்பதால் இந்த படத்திற்கு ‘V’ என்ற வார்த்தையில் துவங்கும் தலைப்பை வைத்துள்ளதாக கிசுகிசுக்கபடுகிது. மேலும், இந்த படத்தின் அடுத்த முக்கிய தகவல் என்னவென்றால் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளதாம்.