நடுரோட்டிலேயே சரமாரியாக நபர் ஒருவரை சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா தாக்கியிருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு முரளி, வடிவேலு, மணிவண்ணன், வினுசக்ரவர்த்தி போன்ற பலர் நடிப்பில் வெளியான ‘சுந்தரா ட்ராவல்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதா. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நடித்த ராதா பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் இவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றியடையாத காரணத்தினால் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தார். பின் நடிகை ராதா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயானார். மேலும், திருமணமாகி சில வருடங்களில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவகாரத்து செய்துவிட்டார்கள்.
ராதா திருமண வாழ்க்கை:
முதல் கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்த ராதாவிற்கு, எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்த வசந்த ராஜன் உடன் பழக்கம் ஏற்பட்டது. வசந்தனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் நடிகை ராதா உடன் ஏற்பட்ட காதலால் வசந்தராஜன் ராதாவும் திருமணம் செய்து கொண்டனர். பின் வசந்த ராஜனை திருமணம் செய்த ராதா கடந்த ஓராண்டாக அவருடன் வாழ்ந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் நடிகை ராதா தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக கூறி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மீண்டும் கம்பேக் கொடுத்த ராதா:
பின் அதனை அப்போதே ராதா வாபஸ் பெற்று விட்டார். இப்படி குடும்ப பிரச்சனை காரணமாக சில வருடங்கள் நடிக்காமல் இருந்த நடிகை ராதா பைரவி என்ற சீரியலில் நடித்தார். அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா 2 சிரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த சீரியலின் மூலம் மீண்டும் நடிகை ராதா கம்பேக் கொடுத்திருந்தார். இந்த சீரியலில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றிருந்தது.
ராதா மீது புகார்:
சமீபத்தில் தான் நல்ல சீரியல் முடிவடைந்திருந்தது. இதனை அடுத்து இவர் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகை ராதா மீது டேவிட் ராஜ் என்பவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அதில் அவர், கடந்த மார்ச் 14ஆம் தேதி என்னுடைய மகன் சாலிகிராமம் அருகே சென்று கொண்டிருந்தான். அப்போது ராதாவும், அவருடைய மகன் தருனும் சேர்ந்து என்னுடைய மகனை சரமாரியாக தாக்கினார்கள். இதனால் என்னுடைய மகன் அதிகமாக படுகாயம் அடைந்துள்ளான். என்னுடைய மகனை தாக்கிய ராதா மற்றும் மகன் இருவரையுமே கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
போலீஸ் விசாரணை:
இதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடிகை ராதாவிடம் விசாரித்து இருக்கிறார்கள். அப்போது ராதா, நான் தாக்கிய பிரான்சிஸ் ரிச்சர்ட் என்னை ரொம்பவே கிண்டல் கேலி செய்தார். இதைக் கேட்க போய் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகி கைகலப்பாகிவிட்டது. ஏற்கனவே டேவிட் ரிச்சர்ட்கும் எனக்கும் இடையே முன் பகை இருந்தது. இதன் காரணமாகவே சில மாதங்களுக்கு முன் என் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை டேவிட் உறவினர் உடைத்து சேதப்படுத்தினார். இது தொடர்பாக நான் புகார் அளித்திருந்தேன் என்று கூறி இருந்தார். இதை அடுத்து போலீஸ் டேவிட் ரிச்சர்டை விசாரித்து வருகிறது.