ஜோசியத்தை நம்பிய தயாரிப்பாளர், விஜய் தந்தை போட்ட கண்டிஷனால் சுந்தர் சியின் சூப்பர் ஹிட் படத்தை மிஸ் செய்துள்ள விஜய்.

0
306
Sundarc
- Advertisement -

உள்ளத்தை அள்ளித்தா படம் குறித்து இயக்குனர் சுந்தர் சி அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் சுந்தர்.சி. கடந்த 1995-ஆம் ஆண்டு வெளி வந்த ‘முறை மாமன்’ படத்தினை சுந்தர்.சி இயக்கியிருந்தார். இது தான் இவர் இயக்கிய முதல் தமிழ் திரைப்படமாம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து இவர் அடுத்தடுத்து பல தமிழ் படங்களை இயக்கினார். மேலும், தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநர் என்பதுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் தனது என்று நினைத்த சுந்தர்.சி அடுத்ததாக ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். இவர் ‘தலைநகரம், வீராப்பு, படத்தின் ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, இருட்டு போன்ற பல படங்களில் நடித்தார். அதன் பிறகு அவரே இயக்கி நடித்த ‘நகரம் மறுபக்கம், கலகலப்பு 1&2, அரண்மனை 1 & 2, 3’ போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

சுந்தர் சி திரைப்பயணம்:

அந்த வகையில் தற்போது சுந்தர் சி அவர்கள் அரண்மனை நான்காம் பாகத்தை இயக்கியிருக்கிறார். இதில் சுந்தர் சி, தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம் புலி, விடிவி கணேஷ், ஜே பி விச்சு, விடிவி ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை Avni Cinemax சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT சுந்தர் சார்பில் Benz அருண்குமார் தயாரித்து இருக்கிறார்கள். மேலும், இதுவரை வந்த மூன்று பாகங்களை விட இந்த படத்தை கொஞ்சம் வித்தியாசமாக இயக்குனர் எடுத்திருக்கிறார்.

சுந்தர் சி பேட்டி:

கடந்த வாரம் தான் அரண்மனை 4 படம் வெளியாகியிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. சுந்தர் சியின் அரண்மனை 4 படம் வெளியானதில் இருந்தே அவரை குறித்து செய்திகள் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் அவர் நிறைய பேட்டிகளையும் கொடுத்து வருகிறார். அந்த வகையில் உள்ளத்தை அள்ளித்தா படம் குறித்து சுந்தர் சி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

உள்ளத்தை அள்ளித்தா படம்:

கடந்த 1996 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம் உள்ளத்தை அள்ளித்தா. இந்த படத்தில் கார்த்திக், கவுண்டமணி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் 175 நாட்களுக்கு மேல் ஓடியது. இந்த நிலையில் இந்த படம் குறித்து அளித்த பேட்டியில் சுந்தர் சி, உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடிப்பதற்காக விஜயிடம் கேட்டிருந்தோம். படத்தினுடைய தயாரிப்பாளர் கொஞ்சம் ஜாதக நம்பிக்கை உடையவர். அவர் இந்த படத்தை ஜனவரி 1996 ஜனவரி 15ஆம் தேதி ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சொன்னார்.

விஜய் குறித்து சொன்னது:

நான் இதைப் பற்றி எஸ் ஏ சி சாரிடம் சொன்னேன். அவர் உடனே கோயம்புத்தூர் மாப்பிள்ளை படம் ஜனவரி 15ஆம் தேதி வருகிறது. நீங்கள் ஒரு பத்து நாள் கழித்து இந்த படத்தை ரிலீஸ் செய்யலாமே என்று கேட்டிருக்கிறார். ஆனால், தயாரிப்பாளர் ஒற்றுக்கொள்ளவில்லை. அதற்கு பிறகு தான் இந்த படத்தில் எதிர்பாராத விதமாக கார்த்தி அண்ணன் நடித்தார். அதேபோல் விஜய் சாருக்கு நான் நிறைய கதை சொல்லி இருக்கிறேன். உன்னை தேடி படத்தோட கதையை முதலில் நான் விஜய் சாரிடம் தான் சொன்னேன். அதற்கு பிறகு தான் அஜித் நடித்தார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement