விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை , சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் 8 வது சீசன் படு கோலாகலமாக துவங்கியது. இந்த சீசனில் Vrusha Balu, Vanathi Suresh, Abhilash V, Anu Anand, Kabhini Mithra, Sushmita Narasimhan, Reshma Shyam, Kanimozhi Kabilane, Sridhar Sena,
Kumuthini Pandian, KJ Iyenar, Maanasi Kannan Balaji Sri, Adithya Krishna, Aravind Karneeswaran, Bharat Rajesh,
Jacqueline Mary, Puratchi Mani, Gaana Sudhakar, Muthu Sirpi என்று பலர் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கின்றனர்.
மேலும், இந்த எட்டாவது சீசனில் இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்குபெற்றுள்ள பலரை பற்றி அறிந்திருக்க வாய்பில்லை. அதே போல இந்த சீசனில் பல சிறந்த போட்டியாளர்கள் இருக்க, முதல் எபிசோடில் நன்றாக பாடி மக்கள் மத்தியில் கவனம் பெற்றவர் ஆதித்யா கிருஷ்ணன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவரை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது ‘நான் ஒரு பாடகர், பாடல் எழுதுவேன், கிட்டார் வாசிப்பேன். மியூசிக் கம்போஸ் பண்ணுவேன் மற்றும் produce செய்வேன்’ என கூறி இருந்தார் ஆதித்யா.
இதையும் பாருங்க : இளம் வயதில் படு கிளாமர் உடையில் விந்தியா நடத்திய போட்டோ ஷூட். வேற ரகம்.
ஆனால், உண்மையில் இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மிகவும் பிரபல நடிகையான மீரா கிருஷ்னனின் மகன் தான். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த மீரா கிருஷ்ணன் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2001 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘காவ்யாஞ்சலி’ சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக நுழைந்தார். அதன் பின்னர் பல்வேறு சீரியல்கள் மற்றும் படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார்.
இவரது மகனான ஆதித்யா, ‘உனக்கென்ன மேலே நின்றாய்’ பாடலை பாடி இருக்கும் மியூசிக் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த பாடலை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் வெளியிட்டு இருந்ததோடு அந்த பாடலை பாடிய ஆதித்யாவை பாராட்டியும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு முக்கிய காரணமே இயக்குனர் லோகேஷ் கனகராஜ், உலக நாயகன் கமலின் தீவிர ரசிகர் என்பதால் தான்.