சூப்பர் சிங்கர் வைல்டு கார்ட் சுற்று – மக்கள் வாக்கால் இறுதி போட்டிக்கு சென்ற போட்டியாளர். அதுவும் இத்தனை சதவீத ஓட்டாம்

0
5286
super
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை , சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் 8 வது சீசன் படு கோலாகலமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முத்து சிற்பி பரத் ஆனந்த் அபிலாஷ் ஆகிய 4 பேர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், கடந்த வாரம் நடைபெற்ற வைல்டு கார்டு சுற்றில் பங்கேற்ற போட்டியாளர்களின் மானஸி, ஆதித்யா, ஐயனார், ஸ்ரீதர் சேனா ஆகிய 4 பேர் டாப் 4 இடத்தில் வந்தனர். இதில் இருந்து யாரவது ஒருவர் இறுதி போட்டிக்கு முன்னேறுவர் என்று எதிர்பகப்பட்ட நிலையில் மக்களின் அதிக வாக்குகளை பெற்று ஸ்ரீதர் சேனா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அதே போல நடுவர்களின் தேர்வாக மானசியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதையும் பாருங்க : தலையில் கலரிங், ஒரே உடை – தன் அம்மா மீனாவுடன் தெறி நைனிகா நடத்திய போட்டோ ஷூட். (இன்னும் கொஞ்ச வருசத்துல ஹீரோயின் தான்)

- Advertisement -

பொதுவாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து யாராவது திறமையான பாடகர்கள் வெளியேறினால் சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கமான ஒரு விஷயம் தான். அதேபோல இதுவரை நடந்து முடிந்த பல்வேறு சூப்பர் சிங்கர் சீசன்களின் டைட்டில்களை தகுதியானவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து தான் வருகிறது.

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதர் சேனா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.ஸ்ரீதர் சேனா இறுதிச் சுற்றுவரை வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாக தான் அமைந்திருந்தது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் அவர் வைல்டு கார்டு சுற்றில் இறுதி சுற்றுக்கு முன்னேறி இருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் 100% வாக்குகளில் ஸ்ரீதர் சேனா மட்டும் 43% வாக்குகளை பெற்று இருக்கிறார். மேலும், ஸ்ரீதர் சேனா தான் இந்த சீசன் டைட்டிலை அடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement